விசுவாசம் (ஆப்பிரிக்கா பயண அறிக்கை) FAITH (AFRICA TRIP REPORT) 52-0816 சனிக்கிழமை மாலை, ஆகஸ்ட் 16, 1952 கெல்லாக் அரங்கம், பேட்டில் க்ரீக், மிச்சிகன், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் ùNn§: 52-0816 - விசுவாசம் (ஆப்பிரிக்கா பயண அறிக்கை) சகோதரர்களே, எனக்காக சிலவற்றைச் செய்தீர்களா? மேலும் நீங்கள் பில்லி பாலை...?... அவர் நிச்சயமாக...?... ஓ, அப்படியா? அப்படியானால், நன்று. அது நல்லது. நான் நினைக்கிறேன்...?... 2 மாலை வணக்கம், நண்பர்களே. நோயுற்றவர்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர் களுக்காகவும் மீண்டும் ஜெபிப்பதற்கு, இன்று இரவு இங்கே இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேவன் தம்முடைய அன்பை உங்கள் அனைவருக்கும் வெளிப் படுத்துவார் என்று நம்புகிறேன்...?... அது சரியா? நாம்... நாம் நம்புகிறோம்...?... உடனடியாக ஆராதனைக்குள் செல்லலாம், சகோதரர் பேக்ஸ்டர் இப்போதுதான் என்னிடம் கூறினார், "நான் ஆபிரகாமைப் பற்றி பிரசங்கித்துக் கொண்டிருந்தேன்," மேலும், "நான் எனது நேரத்தை கடந்துவிட்டேன்," என்றார். ஆகவே நாங்கள் நம்புகிறோம்...?... எல்லா நேரமும் சுவிசேஷ கதைக்காக, எல்லா பிரசங்கத் திற்காகவும். எனக்கு மிகவும் சிறப்பான பிரசங்கம் பிடிக்கும். 3 நாளை மதியம் மிஷனரிகள் என்றால் என்னவென்று அறிந்த ஒரு உண்மையான மனிதர், எனக்கு முன்பாகப் பேசுவார், நாளை மதியம். அது ஏறக்குறைய இரண்டரை, மூன்று மணி என்று நான் நினைக்கிறேன். சகோதரர் பேக்ஸ்டர் அநேகமாக அதை அறிவித்திருப்பார். எனது நெஞ்சார்ந்த நண்பர், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் சகோதரர் ஜாக்சன், மற்றும் சகோதரர் ஜாக்சன் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வெகு தொலைவு பயணித்து இங்கே நம்முடன் இருப்பதற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். அங்கே பல கூட்டங்கள் நடந்துள்ளன. இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக் கேட்டிராத பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் ஆயிரக் கணக்கானோர் இருக்கும் இடத்தில், பூர்வீக மக்களின் வாழ்க்கையைப் பற்றி, அந்தச் செம்மையான வாழ்க்கையைப் பற்றி அவர் பேசுவதைக் கேட்க நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். 4 இலட்சக்கணக்கானோர் அவருடைய நாமம் சொல்லப்படுவதைக் கூடக் கேட்டிராத போது, அந்த ஊழியர்கள் அனைவரும் இங்கே அமெரிக்காவிலும், இதுபோன்ற காரியங்களிலும் சுற்றிக்கொண்டு, சிறிய கோட்பாடுகளைப் பற்றியும் மற்ற காரியங்களைப் பற்றியும் விவாதித்துக் கொண்டிருப்பது நியாயமல்ல. என் இதயம் அவர்களை நோக்கிச் செல்கிறது. நாம் செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? அதுதான் சரி. 5 ஓ, அவர்கள், சில நேரங்களில், அங்கே கீழே சென்று வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதம் ஆகியவற்றைக் கற்பிக்கிறார்கள், ஆனால் அது அவர்களுக்குத் தேவையானது அல்ல. நாகரிகமடைந்த, கல்வி கற்ற ஒரு பூர்வீகக் குடிமகன், அவன் டிரான்ஸ்வாலை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, அவன் தனது பூர்வீக குடிசையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு இருந்ததை விட ஆயிரம் மடங்கு மோசமான நிலையில் இருக்கிறான். அவன் இருக்கிறான். அவனுக்குத் தேவையானது இயேசு கிறிஸ்து மட்டுமே. இன்றைய உலகத்திற்குத் தேவைப்படுவதும் இயேசு கிறிஸ்துவே தான். 6 நாம் இங்கே இருப்பதற்கு நமக்குக் கிடைத்த இந்த வாய்ப்பிற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாங்கள் வருவதில் ஒரு சிறிய குழப்பம் ஏற்பட்டது, அது மேலாளருக்கும் ஊழியர்களுக்கும் ஒரு சிறிய பிழையாக இருந்தது, எனது புரிதலின்படி, நாளை இரவு வரை மட்டுமே [நாங்கள்] இங்கே இருக்க வேண்டியிருந்தது. இரண்டு அல்லது மூன்று [கூட்டங்கள்] பதிவு செய்யப்பட்டுள்ளன, நாங்கள் மின்னியாபொலிஸில் இருக்க வேண்டும், ஆகவே கர்த்தர் என்னை அந்த வழியாக நடத்தினார். மேலும் அது... பேசுகையில், அவர்கள்... திரு. பேக்ஸ்டர், ஊழியரிடம் கொடுக்கும்போது அதைத் தவறாகப் புரிந்து கொண்டார் என்று நான் நினைக்கிறேன், 7 அதைப்பற்றி எங்களிடம் பேச வந்த ஊழியரின் பெயர் சகோதரர் ஃப்ளோ என்று நான் நம்புகிறேன். நான் அவரிடம் பேச விரும்புகிறேன், அது... நம்முடைய கர்த்தர்தான் என்று நான் ஏன் அறிந்திருக்கிறேன் என்பதை அவருக்குச் சொல்ல விரும்புகிறேன். நான் செய்வதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது, அது அவர் நடத்தும் வழியைப் பின்பற்றுவதாகும். அனைத்து கிறிஸ்தவர்களும் அதைப் புரிந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். நான்... 8 கனம் திரு. ஃப்ளோ மற்றும் அவர்கள் கூட்டத்தை நீண்ட நேரத்திற்குத் தொடரும்படி பேச முயன்றபோதிலும். நான் அதைச் செய்ய விரும்பிய போதிலும், எனக்குள், நான் கண்டிப்பாக தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அதுவே உண்மையாகும். 9 நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது... ஆப்பிரிக்காவில் என்ன நடந்தது என்ற கதையை உங்களில் பலர் வாசித்திருக்கிறீர்கள், இல்லையா? ஆம். ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்குச் செல்ல வேண்டாம் என்று கர்த்தர் என்னிடம் கூறினார். சரி, நான் அங்கே சென்றபோது அவர்கள் என்னிடம் சொன்னார்கள், "நீங்கள் இந்த மாவட்டத்திற்குச் செல்ல வேண்டும்" என்று சொன்னார்கள். அதற்கு நான், "சரி, அது எனக்குச் சம்மதமே. நான் சில வாரங்கள் மட்டுமே இங்கே இருக்கிறேன், நான் எங்கே நோயுற்றவர் களுக்காக ஜெபிக்கிறேன் என்பது எனக்கு முக்கியமல்ல" என்று சொன்னேன். 10 எனவே அன்று இரவு, திரு. பேக்ஸ்டர் என்னிடம் வந்தார், அவர் சொன்னார், "சரி, நாம் ஏறக்குறைய நாளைக்குப் புறப்படுவோம், நாளை மறுநாள் என்று நான் நம்புகிறேன்," அவர் சொன்னார், "நாம் கிளர்க்ஸ்டார்ப்-க்குக் கீழே புறப்படுவோம்." "நாம் கிளர்க்ஸ்டார்பிலிருந்து கிம்பர்லிக்கும், கிம்பர்லியிலிருந்து ப்ளூம்ஃபோன் டைனுக்கும், ப்ளூம்ஃபோன்டைனிலிருந்து கேப் டவுனுக்கும், கேப் டவுனிலிருந்து போர்ட் எலிசபெத், ஈஸ்ட் லண்டன், கிரஹாம்ஸ்டவுன் மற்றும் டர்பனுக்கும் செல்வோம்" என்று சொன்னார். 11 சரி, டர்பனில்தான் நான் எல்லா நேரமும் செல்வதாக நினைத்துக் கொண்டிருந்தேன். எனவே நான், "அங்குதான் செல்வி நைட்டிங்கேல் சுகமாக்கப்பட்டார்" என்று சொன்னேன். மேலும் எனக்கு எனது புவியியலைப் பற்றி அதிகம் தெரியாது. நான் எனது மனைவியிடம் சொன்னேன், அவள், "உனது கூட்டங்களை எங்கே நடத்தப் போகிறீர்கள், அன்பே?" என்று கேட்டாள். 12 நான், "அவர்கள் டர்பன், சதர்ன் ரோடிசியாவில் இருப்பார்கள்" என்று சொன்னேன். அது "பேட்டில் கிரீக், கனடா" என்று சொல்வதைப் போன்றது. எனக்குத் தெரிந்தவரை, அப்படி ஒரு இடமே இல்லை. சரி, டர்பன் ரோடிசியாவில் இல்லை; அது தென் ஆப்பிரிக்காவில் உள்ளது. ரோடிசியா, பெல்ஜியத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். மேலும் தென் ஆப்பிரிக்கா ஆங்கிலேயர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவே அது நிச்சயமாக ஒரு... மக்கள், இங்கே அமெரிக்காவில் சில அறிவிலிகள் இருக்கி றார்கள் என்று நினைத்தார்கள் என்று நான் கருதுகிறேன், அதனால் அவர்கள் என் கடிதங்களை டர்பன், தென் ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள். 13 ஆகவே பின்னர், அன்று இரவு, நான் அறையில் இருந்தபோது... எங்களுக்கு மிக மகிமையான கூட்டம் இருந்தது, கர்த்தருடைய தூதன் இறங்கி வந்திருந்தார். மருத்துவச் சங்கம் என்னை அழைத்தது, அவர்கள் அவர்களுடன் காலை உணவு சாப்பிட்டார்கள், எனக்கு ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுத்து, "எங்கள் மருத்துவமனைகளில் உள்ள எதனையும், நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். வாருங்கள். யார் வர விரும்பினாலும், ஜெபிக்கப்பட வாருங்கள்" என்று சொன்னார்கள். "கனம் பிரன்ஹாம், அது உண்மையான தெய்வீக சுகம்," என்று சொன்னதுடன், "நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல" என்றார்கள். நான், "நன்றி" என்று சொன்னேன். 14 ஆகவே நாங்கள்... மேலும் அனைத்து செய்தித்தாள்களும் பேசின, கர்த்தர் எவ்வாறு ஆசீர்வதித்தார் என்பதைப் பற்றியும். பல, பல, பல்லாயிரக்கணக்கான மக்கள் இருந்த இடத்தை விட்டு வெளியேறுவது சற்று விசித்திரமாகத் தோன்றியது, அவர்களால் அவர்களை நகரத்திற்குள்ளே கொண்டுவரக் கூட முடியவில்லை. அவர்கள் ஒரு பெரிய மைதானத்தின் வெளியில் வெகு தொலைவில் இருந்தார்கள், அங்கே அவர்களுக்கு ஒரு மைதானம் இருந்தது. அப்படியிருந்தும், ஆனால், நான், "நான் கேப் டவுனுக்குச் செல்ல விரும்புகிறேன்" என்று சொன்னேன். தென் துருவத்திற்குச் செல்லாமல், நீங்கள் தெற்கே செல்லக்கூடிய தொலைவு ஏறக்குறைய அதுதான். நான், "நான் அங்கே செல்ல விரும்புகிறேன்" என்று சொன்னேன். எனவே நான், "எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை" என்று சொன்னேன். 15 அன்று இரவு, கர்த்தருடைய தூதன் ஒரு தரிசனத்தின் மூலம் எனக்குத் தோன்றினார். அவர் சொன்னார், "அந்த மனிதர்களுடன் செல்ல வேண்டாம். இன்னும் இரண்டு வாரங்கள் இங்கேயே தங்கியிரு, பின்னர் இந்தப் பண்ணைக்குச் செல்," நாளை பேசப்போகும் அந்த மனிதர், திரு. ஜாக்சன்... "பின்னர் அங்கிருந்து, நீ டர்பனுக்குச் சென்று, அங்கே ஒரு மாதம் தங்கியிரு." 16 சரி, நிறவெறி பாகுபாடு இல்லாத ஒரே இடம் அதுதான் என்று எனக்குச் சிறிதும் தெரியாது. ஆனால் நான் எனது மேலாளர்களிடம் அவர்களையும் அந்த மனிதர்களையும் பற்றி சொன்னேன். சகோதரர் பேக்ஸ்டர், "நீங்கள் தேசியக் குழுவைப் பார்ப்பீர்களா?" என்று கேட்டார். நான் அவர்களைப் பார்க்கச் சென்றேன், ஓ, என் தேவனே, பைத்தியம் பிடிப்பதைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அந்தத் திருச்சபை அமைப்பு மட்டுமே, அதனால் அது, "இல்லை ஐயா. நாங்கள் அதைச் செய்யப் போவதில்லை. நாங்கள் அந்த வழியாகத்தான் கீழே செல்லப் போகிறோம்." 17 நான் சொன்னேன், "சகோதரர்களே, அதைச் செய்ய வேண்டாம் என்று கர்த்தர் என்னிடம் கூறினார்." ஆகவே நான்-நான், "இல்லை, என்னால் அதைச் செய்ய முடியாது" என்று சொன்னேன். எனவே நான் அதைச் செய்ய மறுத்துவிட்டேன். சரி, இதோ கார் வந்தது, எப்படியோ என்னை அழைத்துச் சென்றது. கீழே செல்லும் சாலையில், நான், "காரை நிறுத்துங்கள்!" என்று சொன்னேன். நான், "இதைச் செய்ய வேண்டாம் என்று கர்த்தர் எனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்" என்று சொன்னேன். எனவே நான் நிறுத்தினேன். 18 தென் ஆப்பிரிக்காவில் நிறைய வெட்டுக்கிளிகள் உள்ளன, எனவே நான் வெட்டுக்கிளி மரத்திலிருந்த இலைகளில் சிலவற்றைப் பறித்து, மனிதர்களின் கால்களில் சுற்றிலும் பரப்பினேன். நான், "கர்த்தருடைய நாமத்திலே, நம்மால் அந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாது" என்று சொன்னேன். நான், "இது கர்த்தருடைய சித்தம் அல்ல" என்றேன். "ஓ, ஆம் அது அவருடைய சித்தம் தான்." என்று ஊழியர்கள் உடனே என்னிடம் மறுத்துப் பேசினார்கள். அவர்களில் ஒருவர் நடந்து வந்து, "சகோதரர் பிரன்ஹாம், உங்களைத் தவிர வேறொருவரிடமும் தேவன் பேசுவார் என்று நீங்கள் நினைக்கவில்லையா?" என்று கேட்டார். 19 நான் சொன்னேன், "மோசேயிடம் பேசியபோது கோராகுக்கும் ஒருமுறை அந்த யோசனை இருந்தது. பூமி அவனை விழுங்கிக் கொண்டது." நான் சொன்னேன், "இந்த ஒரு காரியத்தை நான் அறிவேன், அவர் உங்களிடம் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர் என்னிடம் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியும்." மேலும் நான், "ஜோகன்னஸ்பர்க்கில் இந்த மூன்று அல்லது நான்கு இரவுகள் நான் அங்கே நின்ற பிறகு, இந்த வேலை நகர்வதை நீங்கள் பார்த்தீர்கள், அப்படியிருந்தும் தேவன் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது என்று என்னிடம் சொல்ல வருகிறீர்களா?" என்று கேட்டேன். 20 திரு. பேக்ஸ்டர் சரியான நேரத்தில் நடந்து வந்து, என்னை ஒரு ஓரமாக அழைத்து, என்னிடம் பேசினார். அவர் சொன்னார், "சரி, நாம்... இது அனைத்தும் இங்கே உள்ள இந்த மனிதர்களைப் பொறுத்தது. நாம் ஒருவகையில் அவர்களுக்குக் கீழே இருக்கிறோம்..." நான் சொன்னேன், "ஆனால், சகோதரர் பேக்ஸ்டர், இது கர்த்தரிடமிருந்து வந்த ஒரு தரிசனம்." 21 நான் நினைக்கவில்லை... மேலும் இங்குள்ள உங்களில் பெரும்பாலானோர் சகோதரர் பாஸ்வொர்த்தை அறிவீர்கள், அவர் மிகச் சிறந்த கிறிஸ்தவ கனவான். அவர் எங்களுடன் இருந்தார். அவர் என்னிடம் நடந்து வந்து, "சகோதரர் பிரன்ஹாம், அங்கே நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்" என்றார். நான் சொன்னேன், "ஓ, சகோதரர் பாஸ்வொர்த்," நான் சொன்னேன், "நீங்கள் பார்ப்பீர்கள்." 22 ஆகவே அவர்கள் எப்படியும் போய்க்கொண்டிருந்தார்கள். நாங்கள் சில மைல்கள் தொலைவில்தான் அங்கே இருந்தோம், மேலும் நாங்கள் அதிலிருந்து, நாங்கள் அங்கே கீழே சென்றபோது: சுமார் ஆறாயிரம் பேர் வசிக்கும் ஒரு சிறிய இடம், அநேகமாக பத்தாயிரம் பேர் அங்கே இருந்தனர், சாப்பிடுவதற்கோ, தூங்குவதற்கோ இடம் இல்லை, அல்லது ஒன்றுமில்லை. ஆகவே அவர்கள் அங்கே வெளியே படுத்துக் கிடந்தார்கள். 23 அது ஒரு நல்ல, சிறந்த, வெப்பமான நாளாக இருந்தது. அன்று இரவு கூட்டத்திற்கு என்னை அழைத்துச் செல்ல அவர்கள் தயாராவதற்கு சற்று முன்பு அங்கே ஒரு வெப்பமண்டலப் புயல் வந்தது. அமெரிக்காவில் உள்ள நீங்கள், அதுபோன்ற ஒன்றை பார்க்கும் வரை புயல் என்றால் என்னவென்று அறியமாட்டீர்கள். அது அங்கிருந்த அனைவரையும் கிட்டத்தட்ட மூழ்கடித்துவிட்டது போல் இருந்தது. பத்து மணி ஆகியும் அது போய்க்கொண்டே இருந்தது: ஆராதனை இல்லை. 24 ஊழியர்கள் அனைவரும் நான் இருந்த இடத்திற்குத் திரும்பி வந்தார்கள். நான் சொன்னேன், "நான் உங்களுக்குச் சொன்னேன். பாருங்கள், கர்த்தர் திருப்தியடையவில்லை. நாம் அவருடைய சித்தத்திற்கு வெளியே செய்வதால் அவர் கோபமாக இருக்கிறார்." "ஏன்," அவர்கள் சொன்னார்கள், "இதைச் செய்யும்படி கர்த்தர் எங்களுக்குச் சொன்னார்." நான் சொன்னேன், "அவர் உங்களிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் என்னை வேண்டாம் என்று அவர் சொன்னார்." 25 மேலும் நான்... அவர் சொன்னார், "சரி, அப்படியானால்," அடுத்த நாள், அவர் சொன்னார், "ஓ, இது... [ஒலிநாடாவில் காலி இடம்]... எல்லா நேரமும், சகோதரர் பிரன்ஹாம்." அடுத்த நாள், அவர்கள் என்னை அழைத்துச் செல்ல தயாரான நேரத்தில், ஒரு பனிப்புயல் வந்து அனைவரையும் கிட்டத்தட்ட உறைய வைத்து கொன்றுவிடுவது போல் இருந்தது. நாங்கள் திரும்பி வந்தபோது, நான் சொன்னேன், "இப்போது, நாளை இரவு நமக்கு ஒரு நிலநடுக்கம் ஏற்படலாம், ஒருவேளை." 26 ஆகவே அவர்கள் சொன்னார்கள், "நமக்கு ஒரு நிலநடுக்கம் ஏற்படும் என்று சொல்கிறீர்களா?" நான் சொன்னேன், "இல்லை, நான்... சொல்லவில்லை, நமக்கு ஒரு நிலநடுக்கம் ஏற்படும் என்று அவர் என்னிடம் சொன்னார் என்று நான் அர்த்தப்படுத்தவில்லை; ஆனால், சகோதரர்களே, நாம் தேவனுடைய சித்தத்திற்கு வெளியே இருக்கிறோம். இதைச் செய்வதன் மூலம் நம்மால் செழிக்க முடியாது." 27 ஆகவே காலை இரண்டு மணி வரை, நாங்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டி ருந்தோம். நான் சொன்னேன், "ஜோகன்னஸ் பர்க்கிற்குத் திரும்பிச் சென்று அங்கே இரண்டு வாரங்கள் தங்கியிருக்கும்படியும், பின்னர் டர்பனுக்குச் சென்று, அங்கே ஒரு மாதம் தங்கியிருக்கும்படியும் கர்த்தர் என்னிடம் சொல்லியிருக்கிறார்." சரி, அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "நாங்கள் சகோதரர்களுக்கு வாக்களித்திருக்கிறோம்" என்று சொன்னார்கள். நான் சொன்னேன், "நீங்கள் சகோதரர்களுக்கு என்ன வாக்க ளித்தீர்கள் என்பது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. தேவன் பேசிக் கொண் டிருக்கிறார்." 28 மனிதர்களாகிய நாம் சில நேரங்களில், நம்மை நாமே மிகவும் சுற்றிக்கொள்கிறோம்... அது எப்படி இருந்ததோ, அதுபோலவே இன்றும் இருக்கிறது (பாருங்கள்), அதே காரியம்: மிகவும் சுற்றிக்கொண்டு, சங்கம் எப்படிச் சொல்கிறதோ அதன்படிதான் அது நடக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம், இல்லையெனில் நீங்கள் வளையத்தில் இல்லை. நீங்கள் தவறானவர். தேவன் தனிநபர்களுடன் இடைபடுகிறார் (அது சரி), எப்போதும் அப்படியே செய்திருக்கிறார். மேலும் புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான காரியங்களை அவர் செய்கிறார், அவரைப் புரிந்துகொள்ள நீங்கள் தேவனை அறிந்திருக்க வேண்டும். அதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் வேதவசனங்களை அறிவீர்கள். நீங்கள் வேதவசனங்களை அறிந்திருந்தால், அது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். ஆகவே எங்களுக்கு ஒரு மிக மோசமான நேரம் இருந்தது. 29 பின்னர் நான்... சுமார் காலை இரண்டு மணி அளவில், ஏறக்குறைய அந்த நேரத்தில், நேரம் ஆகிக் கொண்டிருந்தது, நான் சொன்னேன், "சரி, அவர்கள் அனைவரும்..." நான் சொன்னேன், "நாம் வெளியே... [ஒலி நாடாவில் காலி இடம்]...?... சித்தம்." நான் சொன்னேன், "ஓ, எதையாவது அனுமதிப்பதற்கு அவரிடம் ஒரு அனுமதிக்கும் சித்தம் இருக்கிறது. ஆனால் தேவனின் அனுமதிக்கும் சித்தத்தைச் செயல்படுத்த யார் விரும்புவார்கள்? அவர் நான் எதைச் செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்யவே நான் விரும்புகிறேன் (பாருங்கள்), அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் இருக்க அல்ல." சரி, அது தொடர்ந்தது. ஆகவே அவர்கள், "ஓ, என் தேவனே! அவருடைய அனுமதிக்கும் சித்தம், அதைப்பற்றி அவரிடம் போய்க் கேளுங்கள்" என்றார்கள். 30 சரி, நான் ஜெபிக்க உள்ளே சென்றேன். பில்லி பால் என்னுடன் உள்ளே வந்தான், என் பையன், இங்கே, இங்கே ஜெப அட்டைகளைக் கொடுக்கும் அந்தச் சிறிய பையன். அவன் அறைக்குள் சென்றபோது, நான் அதை ஒருபோதும் மறக்கமாட்டேன். நாங்கள் வாசலில் நடந்தபோது, அவன் தன் கையை என்மீது போட்டான், "அப்பா, நீங்கள் தேவனுக்குச் செவிகொடுங்கள். வெளியே இருக்கும் அந்தப் பிரசங்கிகளுக்கு நீங்கள் செவிகொடுக்க வேண்டாம்" என்று சொன்னான். "நான் உங்களுடன் இருக்கிறேன்," என்று சொன்னான், "நாம் நீந்தி வீடு திரும்ப வேண்டியிருந்தாலும்" என்றான். பாருங்கள்? "நான் உங்களுடனேயே இருப்பேன், அப்பா. நீங்கள் தேவனுக்குச் செவிகொடுப்பது நல்லது" என்று சொன்னான். 31 அந்தப் பையனுக்கு நான் செவிகொடுத்திருந்தால் நான் பத்து இலட்சம் மடங்கு நன்றாக இருந்திருப்பேன். இப்போது, நான் அதை மரியாதையுடன் சொல்கிறேன். அவன் ஒரு சிறுவன் தான், ஆனால் நிச்சயமாக... தேவன் அவனுடன் இருந்தார். 32 நான் ஜெபிப்பதற்காக முழங்கால் படியிட்டேன். அவன் என்னுடன் ஜெபிக்கப் போகிறான். நிச்சயமாக, ஒரு சிறுவனாக இருந்ததால், அவனுக்குத் தூக்கம் வந்து படுக்கைக்குச் சென்றான். நான் விடியற்காலை வெகுநேரம் வரை ஜெபித்தேன். அவர் அறைக்குள் வந்தார். நான் கேட்டேன், "இந்த மனிதர்கள் யார்? அவர்கள் என்ன அர்த்தப்படுத்துகிறார்கள்?" 33 அவர் சொன்னார், "அவர்களுடன் கீழே போ." "நீ இப்போது அந்த நிலையில் இருக்கிறாய். இது இதுபோல எழுதப் பட்டிருக்கிறது, ஆகவே நீ அதைச் செய்ய வேண்டும்" என்று சொன்னார். அவர் சொன்னார், "ஆனால், நினைவில் கொள், இது தேவனுடைய சித்தம் அல்ல, இதற்காக நீ விலைக்கிரயம் செலுத்துவாய்." பாருங்கள்? "ஆனால், போ." சொன்னார், "இதை நீ அறிந்துகொள்ளலாம்." சொன்னார், "போய் உன் மகனை எழுப்பு, அவனிடம் சொல், காலையில், அவர்கள் அவனை ஞாயிறு பள்ளிக்கு அனுப்பப் போகிறார்கள், மேலும் அவர்கள் நோயுற்றவர் களுக்காக ஜெபிக்கத் தீர்மானிக்கப் போகிறார்கள், திரும்பி வரும் வழியில், அவன் ஒரு சிறிய கறுப்பு காரில் ஒரு மனிதருடன் திரும்பி வரத் தொடங்குவான். மேலும் அவன் மற்றொரு வாலிபனை ஏற்றிக்கொள்வான். கீழே செல்லும் சாலையில், ஒரு பாலத்தின் அருகே உள்ள யூகலிப்டஸ் மரத்தடியில், வெள்ளை சபாரி உடை அணிந்த ஒரு பூர்வீக மனிதன், கையில் குச்சியுடன் வேறொருவனை அடிக்கத் தயாராக நின்றுகொண்டிருப்பான்." "உன் மகன் அதை உன் கவனத்திற்குக் கொண்டுவருவான். அதன் மூலம், நான் உன்னை அனுமதித்து அனுப்புகிறேன் என்பதை நீ அறிந்துகொள்வாய். ஆனால், நினைவில் கொள், நீ இதற்காக விலைக்கிரயம் செலுத்துவாய்" என்று சொன்னார். 34 ஆகவே அவர்... அவர் அறையை விட்டு வெளியேறியபோது, நான் சென்று பில்லியை எழுப்பி அவனிடம் சொன்னேன். இப்போது இங்கே இருக்கிற, இங்கே மேடைக்குப் பின்னால் அமர்ந்திருக்கிற திரு. பேக்ஸ்டர், இதில் ஏதேனும் பிழை இருந்தால் வெளியே நடந்து வந்து சாட்சி கொடுக்கலாம். அமர்ந்திருக்கும் திரு. ஜாக்சன், மற்றும் இன்னும் அநேகர். நான் பில்லியை எழுப்பி, கர்த்தருடைய தூதன் என்ன சொன்னார் என்பதை பில்லியிடம் சொன்ன பிறகு... நான் நடந்து சென்றேன். பாருங்கள்? தேவன் அவனை மதித்தார் ஏனென்றால் அவன் சரியான பக்கத்தில் இருந்தான். 35 ஆகவே அந்த மனிதர்கள் இருந்த இடத்திற்கு நான் நடந்து சென்றேன்; நான் அவர்கள் அனைவரையும், சகோதரர் பாஸ்வொர்த், சகோதரர் பேக்ஸ்டர், சகோதரர் ஸ்டாட்ஸ்லெவ், அவர்கள் அனைவரையும் எழுப்பினேன். நான் சொன்னேன், "கர்த்தரிடமிருந்து எனக்கு வார்த்தை கிடைத்துள்ளது. அவர் இப்போதுதான் என்னை அறையில் சந்தித்தார். நாம் அங்கே கீழே செல்லலாம், ஆனால் அது இருக்க வேண்டிய அளவுக்கு வெற்றிகரமாக இருக்காது என்று அவர் சொன்னார். மேலும் நாம் பாதிக்கப்படப் போகிறோம்; நான், நானே, ஒரு பெரிய இழப்பைச் சந்திக்கப் போகிறேன். நீங்களும் பாதிக்கப்படப் போகிறீர்கள்." நான் சொன்னேன், "ஏனென்றால் நான் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை என்று அவர் என்னிடம் சொன்னார். ஆனால் இந்த ஆப்பிரிக்க ஊழியர்களும் மற்றவர்களும் இதை ஏற்பாடு செய்து, அப்படிச் செய்திருப்பதால், அவர் அதை அனுமதிப்பார். ஆனால் இது அவருடைய சித்தம் அல்ல. அதற்காக நான் விலைக்கிரயம் செலுத்த வேண்டியிருக்கும்." 36 இப்போது எனக்குச் செவிகொடுத்துக் கொண்டிருக்கும் சகோதரர் பேக்ஸ்டரிடம், நான் சொன்னேன், "கர்த்தர் இவ்வாறாக உரைக்கிறார், நாம் அந்தக் கூட்டத்தை நடத்தினால், நாம் அமெரிக்காவிற்குத் திரும்பிச் செல்லும்போது, நாம் இன்னொரு ஆராதனையை நடத்துவதற்கு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும்." பாருங்கள்? நான் சொன்னேன், "ஏதோ ஒன்று நடக்கப் போகிறது." ஷ்ரெவ் போர்ட், லூசியானாவில் நின்றுகொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் என்மீது வந்தார், நான் தீர்க்கதரிசனம் உரைத்துக்கொண்டிருந்தேன், ஆப்பிரிக்காவில் எனக்காக ஒரு பொறி வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னேன். [சகோதரர் பிரன்ஹாமிடம் யாரோ பேசுகிறார்கள்] (சரி. இப்பொழுதா சொல்கிறீர்கள்? என்ன சொல்கிறீர்கள்? சில நிமிடங்களில் திரும்பி வருவதா? சரி.) அவர் அழைக்கப்பட்டார், செல்ல வேண்டிய இடத்திற்கு. ஆகவே நாங்கள்... நான் கீழே சென்றேன், "சரி, நல்லது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று சொன்னேன். எனக்கு ஒரு தகப்பனைப் போன்ற, அன்பான முதியவர் சகோதரர் பாஸ்வொர்த். அவர் படுக்கையில் புரண்டு படுத்து, "சகோதரர் பிரன்ஹாம், நீங்கள் சொல்வது தவறு" என்று சொன்னார். 37 நான் அவரைப் பார்த்தேன், என் இதயம் உடைந்தது. பாருங்கள், யாராக இருந்தாலும், உங்கள் நம்பிக்கையை நீங்கள் தேவன் மீது வைக்க வேண்டும். பாருங்கள்? அங்கே, எனது சொந்த சகோதரர்களும், சகோதரர் பாஸ்வொர்த்தும், "சகோதரர் பிரன்ஹாம், அங்கே நீங்கள் தவறு செய்கிறீர்கள்" என்று சொன்னார்கள். "நீங்கள் கீழே சென்று இந்தப் பயணத் திட்டத்தை மேற்கொண்டு அந்த வழியாகச் சென்றால், நீங்கள் மிகவும், ஏராளமாக எல்லாவற்றிற்கும் மேலாக... காண்பீர்கள்" என்று சொன்னார்கள்... அவருடைய-அவருடைய வார்த்தை அங்கே உங்களுக்குத் தெரியும். 38 நான் சொன்னேன், "சகோதரர் பாஸ்வொர்த், நீங்கள் என்னிடம் சொல்ல வருகிறீர்களா? சகோதரர் பாஸ்வொர்த், நான் உங்களிடம் பேசுகிறேன், தேவன் ஒரு தரிசனத்தில் தோன்றினார், அது தோல்வியடையாது." அதற்கு அவர், "சகோதரர் பிரன்ஹாம்," சொன்னார், "சாத்தான்... சாத்தான் ஆதாமுக்கு ஒரு பொய்யான தரிசனத்தைக் கொடுத்தான் என்று நான் ஒருமுறை ஒரு புத்தகத்தில் படித்தேன்." என் சகோதரரே! 39 நான் சொன்னேன், "சகோதரர் பாஸ்வொர்த், ஏறக்குறைய கடந்த ஐந்து ஆண்டுகளாக மேடையில் நீங்கள் என்னுடன் நின்றிருக்கிறீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறீர்கள், அதைச் சரியாக அறிந்திருக் கிறீர்கள்." நான் சொன்னேன், "சாத்தான் ஆதாமுக்கு என்ன செய்தான் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இது தேவனிடமிருந்து வருகிறது என்று எனக்குத் தெரியும்." மேலும் நான் சொன்னேன், "நீங்கள்... இப்போது அங்கே பாருங்கள்." பாருங்கள், நீங்கள், யாராக இருந்தாலும், தேவன் உங்களை ஒன்றைச் செய்யச் சொல்லும்போது, நீங்கள் அதைச் செய்யுங்கள். அது உங்கள் தாயாக இருந்தாலும், அப்பாவாக இருந்தாலும், போதகராக இருந்தாலும், தீர்க்கதரிசியாக இருந்தாலும், அல்லது வேறு யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள் தேவனுக்குச் செவி கொடுங்கள். பாருங்கள்? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சாட்சிகள் அருகில் நிற்கிறார்கள், தேவனே எனக்குச் சாட்சி. நான், "சரி" என்று சொன்னேன். என்ன நடக்கப் போகிறது என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, வெளியே சென்றேன். 40 அன்று காலையில், அவர்கள் அங்கே கீழே சென்றபோது, நிச்சயமாகவே, அவர்கள் திரும்ப அனுப்பி... நோயுற்றவர்களுக்காக நான் வந்து ஜெபிக்க வேண்டும் என்று விரும்பினார்கள், ஒரு இளம் நபர் எனக்குப் பின்னால் வந்தார், ஒரு... பில்லியுடன் ஒரு சிறிய கறுப்பு காரில், நிச்சயமாக அவர்கள் என்னிடம் பேசக்கூடாது, ஏனென்றால் பிரசங்கிக்கவும் நோயுற்றவர்களுக்காக ஜெபிக்கவும் அபிஷேகத் திற்குத் தயாராகும்படி அவர் என்னிடம் சொல்லியிருந்தார். வரும் வழியில் அவர் மற்றொரு பையனை சாலையில் ஏற்றிக் கொண்டார். பில்லி அதைப்பற்றி மிகவும் பரவசமடைந்தான். 41 மேலும் கீழே செல்லும் சாலையில், அவர் திரும்பிப் பார்த்து, "அப்பா, ஏதோ ஒன்று," என்று சொல்லி, ஒரு பாலத்தின் அருகே உள்ள ஒரு யூக்கலிப்டஸ் மரத்தடியில், வெள்ளை சபாரி உடை அணிந்த ஒரு பூர்வீக மனிதன், வேறொருவனை அடிப்பதற்குத் தயாராக நின்றுகொண்டிருந்தான். அவன், "அப்பா, அந்த மனிதன் மற்றவனை அடிக்கப் போவதைப் பாருங்கள்" என்று சொன்னான். நான், "நான் உன்னிடம் சொன்னது நினைவிருக்கிறதா?" என்று கேட்டேன். கர்த்தர் நிறைவேற்றிக் கொண்டுவந்ததைக் கண்டபோது அந்தச் சிறு பையன் அழுதான்... நான், "நீ பார்க்கிறாயா, பால்? நான் போகலாம், ஆனால் அப்பா இதற்காகப் பாதிக்கப்படுவார்" என்று சொன்னேன். பாருங்கள்? 42 சரி, நாங்கள் அங்கிருந்து புறப்பட்ட பிறகு, கிளர்க்ஸ்டார்ப்பிற்குச் சென்றோம். அங்கே பிரச்சனை உண்டானது: முதலாவது ஒரு காரியம், பின்னர் மற்றொன்று. அங்கே ஒரு ஊழியர், "எனது சபையில் நடத்தலாம் என்று சகோதரர்கள் என்னிடம் சொன்னார்கள்" என்றார். சுமார் பதினைந்தாயிரம் மக்கள், ஆனால் ஐந்நூறு பேர் அமரக்கூடிய சபை. இல்லை ஐயா, எங்களுக்கு வேறு இடமே கிடைக்கப் போவதில்லை. அவருடைய சபையில் நடத்தப்படும் என்று அவர்கள் வாக்களித் திருந்தார்கள். மேலும் அங்கேதான் அது நடத்தப்படப் போகிறது. சகோதரர் பாஸ்வொர்த் தமது தொப்பியை கழற்றிவிட்டு தெருவில் நடந்து சென்றார். சகோதரர் பேக்ஸ்டர் அங்கிருந்து சென்று, தங்குவதற்கு தனக்கு வேறொரு இடத்தைப் பார்த்தார். 43 நான் சொன்னேன், "சகோதரர் பாஸ்வொர்த், இதுதான் அந்த 'நீங்கள் நினைப்பதற்கும் அல்லது செய்வதற்கும் மேலாக மிகவும், ஏராளமாக' என்பதாகும். உங்களுக்குச் சொல்லப்பட்டது நினைவிருக்கிறதா? நாம் வீடு திரும்பும் வரை இது இப்படியே இருக்கும்." நான், "அது அப்படித்தானே இருக்கிறது என்று பாருங்கள்" என்றேன். 44 மேலும் இப்போது அருகிலிருக்கிற சகோதரர் பேக்ஸ்டர், தேவனுக்கு முன்பாக ஒரு சாட்சியாக, இது உண்மை என்று அறிவார், அதுதான் உண்மை என்றும் அறிவார். மேலும் அங்கே ஒரு காரியத்தின் மேல் ஒன்றாகத் தொடங்கியது, அதாவது... ஒன்றன் பின் ஒன்றாக குவிந்துகொண்டே இருந்தது, ஒன்றன் பின் ஒன்றாக, நாங்கள் மீண்டும் கீழே வந்து, கேப் டவுனை அடையும் வரை. 45 இப்போது கர்த்தர் ஆசீர்வதித்தார். அவருடைய-அவருடைய வல்லமை, அவருடைய கிரியைகள் அதேபோலவே தொடர்ந்து நடந்தன. ஆனால் நாங்கள் போர்ட் எலிசபெத்திலிருந்து கிரஹாம்ஸ்டவுனை நோக்கித் திரும்பத் தொடங்கிய இடத்திற்கு வந்தபோது, சகோதரர் பேக்ஸ்டர் மிகவும் நோய்வாய்ப்பட்டார், மிகவும் நோய்வாய்ப்பட்டார். பில்லி பால் மிகவும் நோய்வாய்ப்பட்டான். அங்கே எங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக குவியத் தொடங்கியது. பின்னர், சிறிது நேரத்திற்குப் பிறகு, எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. நான் கர்த்தரிடம் சென்றேன்: அவர் தம்முடைய முதுகை எனக்குத் திருப்பிக் கொண்டார். நாங்கள் டர்பனுக்குச் சென்றோம். நான் அங்கே நின்றேன், ஏவுதலின் கீழ், தேவன் ஒரே பலிபீட அழைப்பில் முப்பதாயிரம் மக்களைப் பலிபீடத்திற்குக் கொண்டு வந்தார். இருந்த போதிலும், அது எனக்குக் கிடைத்த தேவனுடைய கிருபை. நான் அதை அறிந்திருந்தேன். 46 பின்னர் நாங்கள் டர்பனுக்கு வந்தபோது, கறுப்பின மக்களையும் வெள்ளையின மக்களையும் ஒன்றாக வர அனுமதித்த ஒரே இடம் அதுதான். மற்றொன்று... பரிசுத்த ஆவியானவர் அதைத் தொடக்கத்திலேயே அறிந்திருந்தார். பாருங்கள்? ஆகவே அங்கே உங்களால் பார்க்க முடிந்த தூரம் வரை, மக்கள் அந்தப் பெரிய பந்தய மைதானங்களில் இருந்தார்கள், பார்க்க முடிந்த தூரம் வரை, மக்களால் ஆன ஒரு திடமான கூட்டம், தெருவில் நான்கு நகரத் தொகுதிகளுக்கு, நீங்கள் இங்கே அமர்ந்திருப்பதைப் போலவே, நகரத் தொகுதிகளில் தடுக்கப்பட்டு அமர்ந்திருந் தார்கள். மழை கொட்டி கொண்டிருந்தது, மேலும் பல, அவர்கள் அதைக் கவனிக்கவே இல்லை. அவர்கள் அப்படியே அமர்ந்து கொண்டிருந் தார்கள். ஆனால்... 47 பின்னர் நான் அங்கே சென்றபோது, "நிச்சயமாக அவர்கள் இங்கே சிறிது காலம் தங்க என்னை அனுமதிப்பார்கள்" என்று நினைத்தேன். அவர்கள் ஏற்கனவே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்; நான் நினைக்கிறேன், டர்பனில் மூன்று நாட்கள் மட்டுமே. பின்னர் நான் சதர்ன் ரோடிசியாவிற்கு வெகு தொலைவு செல்ல வேண்டியிருந்தது, ரோடிசியாவிற்கு உள்ளே வெகு தொலைவு செல்ல வேண்டியிருந்தது. பின்னர் அங்கே இரண்டு நாட்கள் இருந்த பிறகு பிரிட்டோரியாவிற்குத் திரும்பி வந்தேன். 48 மிகவும் நோய்வாய்ப்பட்டு, என் தலையைத் தூக்க முடியவில்லை. பின்னர் நான் அந்த மனிதர்களிடம் திரும்பிச் சென்றேன், நாங்கள் அனைவரும் நோய்வாய்ப்பட்டு, அனைவரும் நிலைகுலைந்து, எல்லாம் தவறாகிப் போயிருந்தன. நான் அந்த மனிதர்களிடம் திரும்பிச் சென்று, "நான் உங்களிடம் சொன்னது நினைவிருக்கிறதா?" என்று கேட்டேன். கடலைக் கடந்து வரும்போது, சகோதரர் பேக்ஸ்டரிடம், "உங்களுக்கு நினைவிருக்கிறதா?" என்று கேட்டேன். 49 நான் இங்கே அமெரிக்காவிற்கு வந்தபோது, அங்கே எங்கேயோ இந்தியர் களிடத்தில் இருந்தபோது, குடல் பாதை வழியாக வயிற்றில் ஒட்டுண்ணிகள் தங்கியிருந்தன என்றும், அது சீதபேதியை ஏற்படுத்தியது என்றும் கண்டறியப்பட்டது. நாங்கள் அனைவரும் சாகும் தருவாயில் இருந்தோம், நோய்வாய்ப்பட்டு, நிலைகுலைந்திருந்தோம். 50 பின்னர் தேவன் என்னிடம் பேசத் தொடங்கினார். நான் தரையில் நடந்து கொண்டே, அழுதுகொண்டே அவருக்கு வாக்களித்தேன். அதன் பிறகு ஏழு மற்றும் எட்டு மாதங்களுக்கு இடைப்பட்ட காலம் வரை நாங்கள் வேறொரு கூட்டத்தை நடத்தவே இல்லை. என்னால் செல்ல முடியாத அளவுக்கு நான் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தேன். எந்த அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தேன் என்றால், என்னால் என் தலையைக்கூட உயர்த்த முடியவில்லை, தேவனுக்காகக் காத்திருந்து அங்கேயே தங்கியிருந்தேன். 51 பின்னர் ஒரு இரவு, அவர் ஒரு தரிசனத்தில் இறங்கி வந்தார். ஓ, அது எப்படிப்பட்ட உணர்வு என்று உங்களுக்குத் தெரியாது. அவர் அங்கே நடந்து வந்தார். நான் அறையில் படுத்துக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் வந்து, "இப்போது, பயப்பட வேண்டாம்" என்று சொன்னார். என் பாவம் மன்னிக்கப்பட்டது. என்ன நடக்கப் போகிறது என்று அவர் என்னிடம் சொன்னார். அவர், "இப்போது, அது உன்னை விட்டு நீங்கப் போகிறது. நீ நன்றாக இருப்பாய், ஆனால் உனக்குச் சொல்லப்பட்டதற்கு இனிமேல் கீழ்ப்படியாமல் இருக்க வேண்டாம்" என்று சொன்னார். அவர், "இப்போது, நீ ஒரு கூட்டத்தை நடத்தப் போகிறாய்," என்று சொல்லி, "மீண்டும் டர்பன், தென் ஆப்பிரிக்காவில்" என்று என்னை அமர்த்தினார். பல, பல்லாயிரக் கணக்கானோரைக் கொண்ட அந்தப் பழைய கூட்டம் மேற்கே நீல நிறத்தில் மறைந்து போவதைக் கண்டேன், எனக்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அமர்ந்திருந் தார்கள். 52 பின்னர் அவர் என்னிடம், "உன் வலதுபுறம் திரும்பு" என்று சொன்னார். நான் என் வலதுபுறம் திரும்பியபோது, வானத்தி லிருந்து ஒரு பெரிய ஒளி இறங்கி வந்து, நான் இருந்த இடத்தின் மேல் நின்றது. அது முன்னும் பின்னும் அசைகிற ஒரு ஒளியாக இருந்தது. அதற்குள்ளே மனிதர்கள் அரைகுறையாக ஆடை அணிந்திருந்தார்கள், இதுபோல, தங்களைச் சுற்றி ஏதோ ஒன்றைச் சுற்றிக்கொண்டு, மெலிந்த தோற்றமுள்ள மனிதர்கள் தங்கள் கைகளை வானத்தை நோக்கி உயர்த்தி, தேவனைத் துதித்துக் கொண்டிருந்தார்கள். 53 நான், "அவர்கள் இந்தியர்களைப் போல இருக்கிறார்கள்" என்று சொன்னேன். பின்னர் இந்த ஒளி கீழே வந்தது, முன்னும் பின்னும் அசைகிற ஒளி, அது மலைகளுக்கு மேலே வெகு தூரம் சென்றது, அங்கே ஆயிரக் கணக்கான ஆயிரங்கள் இருந்தார்கள். பின்னர், நான், "அவர்கள் அனைவரும் கறுப்பின மக்களா?" என்று கேட்டேன். அவர் அதை இங்கே எனக்கு முன்னால் கீழே வைத்தார், அங்கே வெள்ளையின மக்கள் இருந்தார்கள். நான் இந்த வழியில் திரும்பிப் பார்த்தேன், அவர்கள் இந்திய வகை மக்களாக இருந்தார்கள். நான் சொன்னேன்... பின்னர் அது எனக்கு மிக அருகில் வந்தது, அவர் அழைத்த எண்ணிக்கையை நான் கேட்டேன். 54 அவர், "அந்தக் கூட்டத்தில் மூன்று இலட்சம் பேர் இருக்கிறார்கள்" என்று சொன்னார். இப்போது, அதை உங்கள் புத்தகத்தில் குறித்துக்கொள்ளுங்கள், மூன்று இலட்சம் மக்களைக் கொண்ட ஒரு கூட்டம் அங்கே நடைபெறுகிறதா இல்லையா என்று பாருங்கள். நீங்கள் அறிந்துகொள்ளும்படி அது நிறைவேறுவதற்கு முன்பே சொல்கிறேன். 55 பின்லாந்தில் ஒரு சிறுவன் எழுப்பப்பட்டதைப் பற்றிய தீர்க்கதரிசனம், அவன் எழுப்பப்படுவதற்கு சுமார் இரண்டு ஆண்டு களுக்கு முன்பே சொல்லப்பட்டது உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? அதை அறிந்தவர்கள் உங்கள் கையை உயர்த்துங்கள். அங்கே சாட்சிகளைப் பாருங்கள். பாருங்கள்? அனைத்தும் மிகத் துல்லியமாக, அவன் எப்படி இருப்பான், அவன் எங்கே இருப்பான், அது எப்படி நடக்கும். அவன் நெடுஞ்சாலையில் சுமார் முப்பது நிமிடங்கள் இறந்து கிடந்தான். உங்களில் பலர் அந்தக் கதையை நினைவில் வைத்திருக்கிறீர்கள், அது எப்படி இருந்தது என்பதையும். அது 'வாய்ஸ் ஆஃப் ஹீலிங்' (The Voice of Healing) பத்திரிகையில் வரும் என்று அங்கே நான் சொன்னேன். அங்கே ஃபின்னிஷ் அதிகாரிகளுடன் அவர்களுடைய முத்திரை களுடன் (இன்று என் வீட்டில் இருக்கிறது), ஒரு காகிதத்தில் அரசாங்க முத்திரைகள்; அது நடந்தேறியது. பாருங்கள்? ஒரு சிறுவன் மோதப்பட்டு கொல்லப்பட்டிருந்தான். 56 கர்த்தருடைய தரிசனம் இறங்கி வந்த இடம், மற்ற பையனைப் பற்றிச் சொன்னது, நீங்கள் அந்தக் கதையைப் பலமுறை கேட்டிருக்கிறீர்கள், சந்தேகத்திற்கு இடமின்றி புத்தகங்களிலும் படித்திருக்கிறீர்கள். இப்போது, அந்தக் காரியங்கள் தேவன் என்ன செய்யச் சொல்கிறாரோ அவைகள். இப்போது, மறுநாள், எப்போது... தேவன் என்னிடம் பேசும் வரை நான் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய மாட்டேன். 57 பின்னர் நான் ஹம்மண்ட், இந்தியானாவைப் பற்றி மிகவும் திட்டவட்டமாக உணர்த்தப்பட்டேன். நான் ஹம்மண்டிற்குச் சென்று சுற்றிப் பார்த்தபோது, சரி, அந்த கலையரங்கம் குளிர்சாதன வசதி செய்யப் படவில்லை என்பதைக் கண்டேன், எல்லோரும், "அது ஒரு கல்லறைத் தோட்டம். நீங்கள் அங்கே செல்ல வேண்டாம். பையனே, நீ அங்கே சென்றால், அது-அது உண்மையில் ஒரு கல்லறைத் தோட்டம்" என்று சொன்னார்கள். "அங்கே-அங்கே-அங்கே ஒன்றுமில்லை" என்று சொன்னார்கள். "தெய்வீக சுகத்தைப் பிரசங்கித்து, காரியத்தைச் சிதறடித்த எவனோ ஒருவன் அங்கே உள்ளே போயிருக்கிறான்" என்று சொன்னார்கள். "அது பயங்கரமானது" என்றார்கள். சரி, கர்த்தர் என்னை ஹம்மண்டிற்குச் செல்லச் சொன்னார். ஆகவே நான் ஹம்மண்டிற்குச் சென்றேன். அவர், "நீங்கள் எவ்வளவு காலம் தங்கப் போகிறீர்கள்?" என்று கேட்டார். 58 நான், "ஒரு நாளிலிருந்து, இயேசு வரும் வரை. எனக்குத் தெரியாது" என்று சொன்னேன். நான் சொன்னேன், "இப்போது ஒருபோதும் ஒரு கூட்டத்தை எந்தக் குறிப்பிட்ட காலத்திற்கும் அமைக்க வேண்டாம், ஏனென்றால் எனக்குத் தெரியாது, வெறும்... அவர் எப்படி நடத்துவாரோ அப்படியே நான் செல்வேன் என்று நான் தேவனிடம் வாக்களித்தேன், அவர் எங்கே சென்றாலும் செல்வேன். நான்..." அதனால்தான் நான் 'வாய்ஸ் ஆஃப் ஹீலிங்' பத்திரிகையுடன் இல்லை, அந்தப் பத்திரிகைகள் எதுவுடனும் இல்லை. என்னால் பத்திரிகைகளை வைத்திருக்க முடியாது. இல்லை ஐயா. நான் தேவனைப் பின்பற்றினால், எனக்குப் பத்திரிகைகளுக்கு நேரம் இல்லை. அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதை நான் செய்ய வேண்டும். 59 இந்த மனிதர்களில் சிலர், அவர்கள் உயிருடன் இருந்தால், தங்கள் கூட்டங்களை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அமைத்துக் கொள்ளலாம். அவர்க ளுடைய... அது அவர்களுடைய ஊழியம். என்னுடையது அந்த வகை ஊழியம் அல்ல. அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதை நான் செய்ய வேண்டும். நீங்கள் அனைவரும் அதை உணர்கிறீர்கள். பின்னர் அவர் என்னை ஹம்மண்டிற்கு அனுப்பினார். 60 இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது, இங்கே பால்டிமோரில் என்று நான் நம்புகிறேன், பத்தாயிரம் பேர் அமரக்கூடிய ஒரு கலையரங்கம், ஜூலை மாதம் முழுவதும் முற்றிலும் இலவசம், குளிர்சாதன வசதி செய்யப்பட்டது, ஐந்நூறு பிரசங்கிகள் பதிவு செய்திருந்தார்கள். அந்தக் காகிதங்கள் இன்று என் மேசையில் கிடக்கின்றன, அவர்களில் சிலர் மெதடிஸ்ட், சிலர் பாப்டிஸ்ட் மற்றும் முழு சுவிசேஷப் பிரசங்கிகள்; கூட்டத்திற்கு ஒத்துழைக்க அவர்களில் ஐந்நூறு பேர். சகோதரர் பாஸ்வொர்த், "இதை விட சிறந்தது இருக்க முடியாது, சகோதரர் பிரன்ஹாம்" என்று சொன்னார். 61 நான் சொன்னேன், "தேவனால் முடியும்." அவர் எனக்குச் சொல்லும் ஒரு இடமாக இருந்தால்; அங்கே ஐந்து பேர் கூட இல்லை என்றாலும் எனக்குக் கவலையில்லை, நான் போக வேண்டும் என்று அவர் என்னிடம் சொன்னால், அங்கேதான் நான் போக விரும்புகிறேன். அங்கே எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. தேவனுடைய சித்தத்தைத்தான் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம். 62 இப்போது, நோயுற்றவர்களுக்காக மட்டும் ஜெபிக்கிற இந்த மனிதர்கள், முன்னே வருகிறார்கள், அவர்கள், "இந்த வருடத்தில் நாங்கள் இங்கே இருப்போம், இந்தத் தேதியில் அங்கே இருப்போம்" என்று சொல்கிறார்கள், அவர்களுடைய பத்திரிகைகள் வெளியே போகின்றன. அது சரியே. அது அவர்களுடைய ஊழியம். என்னுடையது அந்த வகையான ஊழியம் அல்ல. ஆகவே, நாளை எங்கே செல்வது என்று எனக்குத் தெரியாது. மேலும் நான்... கர்த்தர் எங்கே சொல்வாரோ அங்கே செல்வேன். 63 பின்னர், சகோதரர் பேக்ஸ்டர் சொன்னார், "இங்கே அநேக மக்கள் இருக்கிறார்கள்; பேட்டில் கிரீக்கிலிருந்து சிலர்; இங்கிருந்தும், அங்கிருந்தும், மின்னியாபொலிஸ் வரையிலும், சுற்றிலும் உள்ள மக்கள், சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வந்தவர்கள், மற்றும் பலர், பெரிய கூட்டங்களை அமைக்கலாம்." நான் சொன்னேன், "சகோதரர் பேக்ஸ்டர், எனக்கு எந்த நடத்துதலும் இல்லை, எதுவுமே இல்லை." அவர் சொன்னார், "சரி, நாம் சிகாகோவுக்குச் செல்வோம். அங்கே அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய இடம் இருக்கிறது, ஒரு பெரிய அரங்கம் போன்ற இடம்." நான், "நன்றாகத் தெரிகிறது" என்று சொன்னேன். பின்னர் ஒரு நாள் அவர் அங்கே செல்லத் தொடங்கினார், அவர், "சரி, நான் அதை உறுதி செய்யட்டுமா? திரு. போஸ் மற்றும் சில ஊழியர்கள் அங்கே இருந்தார்கள்" என்றார். நான் சொன்னேன், "இல்லை. நீங்கள் ஒரு நிமிடம் காத்திருப்பது நல்லது." 64 நான் என் மனைவியையும் அவர்களையும் அழைத்துக்கொண்டு, கீழே சென்று, அவர்களைக் கோளரங்கத்தில் (planetarium) விட்டேன். அவர்கள் அதைச் சுற்றிப் பார்க்க விரும்பினார்கள். நான் திரும்பி நடந்து, இந்த இடத்தை நோக்கிச் சென்றேன், பரிசுத்த ஆவியானவர் சொன்னார், "அங்கிருந்து விலகி இரு." நானும் விலகி இருந்தேன். நான் அதை அப்படியே கடந்து சென்றேன். ஆகவே பின்னர், ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரியாது. பின்னர் அவர், "சீயோனுக்குப் பக்கமாகத் திரும்பு" என்று சொன்னார். நான் நீண்ட காலத்திற்கு முன்பு சீயோனுக்கு வாக்களித்திருந்தேன், நான் ஒருவகையில் கடமைப்பட்டிருந்தேன். நான், "சரி. நான் சீயோனுக்குச் செல்வேன்" என்று சொன்னேன். 65 பின்னர் சகோதரர் பேக்ஸ்டர் என்னிடம் வந்து, "இங்கிருந்து நாம் எங்கே செல்வது என்பதைப் பற்றி என்ன?" என்று கேட்டார். நான் சொன்னேன், "இப்போது, சகோதரர் பேக்ஸ்டர், எனக்கு எந்த நடத்துதலும் இல்லை." அவர் சொன்னார், "சகோதரர் பிரன்ஹாம், நமக்கு ஒரு கலையரங்கம் கிடைத்தால், நீங்கள் அதை தேதி குறிப்பிட வேண்டும்." நான் சொன்னேன், "ஆம், அது உண்மை." அவர் கேட்டார், "சரி, பேட்டில் கிரீக்கைப் பற்றி நீங்கள் என்ன நினைக் கிறீர்கள்?" சொன்னார், "நீங்கள் பேட்டில் கிரீக்கிற்குச் செல்ல விரும்புகிறீர்களா?" நான் சொன்னேன், "மற்ற எல்லாவற்றையும் போலவே பேட்டில் கிரீக்கும் எனக்குத் தெளிவாக இருக்கிறது." மேலும் நான், "அது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று சொன்னேன். 66 அதற்கு அவர் சொன்னார், "சரி, நான் விசாரித்துப் பார்க்கிறேன்." ஊழியர்களுக்கு எழுதினார், அல்லது அவர்களை அழைத்தார் அல்லது வேறு ஏதோ செய்தார் என்று நான் நம்புகிறேன். அவர் திரும்பி வந்து, "நீங்கள் பேட்டில் கிரீக்கிற்குச் செல்ல விரும்புவது போல் உணர்கிறீர்களா?" என்று கேட்டார். நான் சொன்னேன், "ஆம், இரண்டு இடங்கள் என் பரிசீலனையில் உள்ளன. ஒன்று மின்னியாபொலிஸ், மற்றொன்று பேட்டில் கிரீக். அந்த இரண்டையும் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், அந்த இரண்டையும் குறித்து ஜெபித்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் எனக்கு இன்னும் தெரியவில்லை." நான் சொன்னேன், "நான் பேட்டில் கிரீக்கை நோக்கிச் செல்ல இன்னும் கொஞ்சம் அதிகமாக நடத்தப்படுவதாக உணர்கிறேன் என்று நம்புகிறேன்." நான் சொன்னேன், "நான் மின்னியாபொலிஸில் இதற்கு முன்பு இருந்திருப்பதால், நான் பேட்டில் கிரீக்கிற்குச் செல்லவே விரும்புகிறேன் என்று நான் நம்புகிறேன்." நான் சொன்னேன்... அவர் சொன்னார், "சரி. நான் அதை பேட்டில் கிரீக் என்று முடிவு செய்கிறேன்." 67 சரி, அது ஒரு நீண்ட காலத்திற்கு அமைக்கப்பட்டது என்று எனக்குத் தெரியாது. ஆகவே பின்னர், இறுதியில், நான் குழந்தையின் பணிப்பெண்ணிடம் கூடச் சொன்னேன். நான், "கர்த்தர் அனுமதித்தால், வரும் திங்கட்கிழமை நாங்கள் வீட்டில் இருப்போம்" என்று சொன்னேன். நான் சொன்னேன், "எனக்குத் தெரிந்தவரை, அவர்கள் வைத்திருப்பார்கள்..." நான் சொன்னேன், "அந்த இரண்டு இடங்களுக்கும் இடையில் என்று நான் உணர்கிறேன், ஏனென்றால் நான் பேட்டில் கிரீக்கிற்குச் செல்லாதிருப்பதற்கு எனக்கு ஒரு காரணம் இருந்தது, அல்லது... அங்கே செல்வதற்கு, ஏனென்றால் நான் அங்கே முன்பு இருந்திருக்கிறேன்." 68 சரி, நான் செல்வதற்கு சுமார் நான்கு நாட்களுக்கு முன்பு... பின்னர், அவர், சகோதரர் பேக்ஸ்டர் சொன்னார், "நாம் அவருடைய சபையில் உள்ள கலையரங்கத்தைப் பயன்படுத்தலாம் என்று சகோதரர் போஸ் சொன்னார், அல்லது, நாம் அங்கே செல்வதற்கு முன்பு இரண்டு அல்லது மூன்று இரவுகள் வர விரும்பினால், ஒரு சிறிய கலையரங்கம் இருக்கிறது." நான் சொன்னேன், "சரி, நான் அதைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கிறேன்." நான் சொன்னேன், "இப்போது, நாம் அங்கே ஒரு இரவு இருக்கலாம். கர்த்தர் நகரச் சொன்னால், நான்-நான் செல்கிறேன்." அவர் சொன்னார், "நாம் எடுத்துக்கொள்வது நல்லது..." அவர், "நாம் சபையை எடுத்துக்கொள்வது நல்லது" என்றார். நான், "சரி" என்று சொன்னேன். பாருங்கள். நான், "இப்போது, அது சரியாக இருந்தால், ஒருவேளை ஒரு இரவு" என்று சொன்னேன். சரி. 69 நாங்கள் அங்கே சென்றோம், எங்களுக்கு ஒரு சிறந்த, மகிழ்ச்சியான கூட்டம் இருந்தது. ஆனால் நான் மேலே செல்வதற்கு முன்பு, ஒரு இரவு நான் அங்கே படுத்துக் கொண்டிருந்தேன், நான்... இப்போது, கவனமாகக் கேளுங்கள். இது ஒரு அறிக்கை. மேலும் நான் இரவில் வெகு நேரம் வரை விழித்திருந்தேன், மக்கள் வருவது மற்றும் அனைத்தும். நான் தூங்கச் சென்றேன், இரவு முழுவதும் தூங்கினேன், காலையில் சுமார் ஐந்து அல்லது ஆறு மணியளவில், ஒரு பயங்கரமான கனவினால் நான் எழுப்பப்பட்டேன். 70 ஒரு மிகப்பெரிய, சேற்று அலை வருவதை நான் கண்டதாகக் கனவு கண்டேன், அது ஒரு சிறிய குடிசையைத் தாக்கியது. என் மனைவி உள்ளே இருப்பதை நான் அறிந்திருந்தேன், நான் உள்ளே ஓடி அவளைப் பிடித்து, அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். நான், "ஓ, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொன்னேன். நான் விழித்துக் கொண்டேன். நான், "என் தேவனே, அது ஒரு பயங்கரமான கனவு" என்று சொன்னேன். 71 நான் அவளைத் திரும்பிப் பார்த்தேன், அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். நான் சொன்னேன், "சரி, இப்போது அங்கே ஏதோ நடந்தது. அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை." சில நிமிடங்களில், நான், "சரி, இது விசித்திரமாக இருக்கிறது. எனது அறையில் எனக்கு வந்த கனவைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இதோ நான் இங்கே ஒரு பாய்மரப் படகில் அமர்ந்திருக்கிறேன், மிகத் தெளிவான, நீல நிற நீரில் என் கைகளை வைத்துக்கொண்டு, சேற்று நீர் அல்ல, தெளிவான நீல நீர். நான் நீரோட்டத்தின் மேலே போய்க் கொண்டிருந்தேன்" என்று சொன்னேன். இல்லை... நான் நினைத்தேன், "சரி, சொல்லுங்கள், நான் கனவு காண்கிறேனா?" சற்று நேரத்தில், எனக்குப் பின்னால் ஏதோ ஒன்று, "பட், பட், பட், பட், பட்" என்று சத்தம் போடுவதைக் கேட்டேன். 72 நான் நினைத்தேன், "சரி, இது... என்ன... எனக்குப் புரியவில்லை." நான் வேறெங்காவது இருப்பதைப் போல, நான் சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு சபையில் ஒலி பெருக்கியில் பேசிக்கொண்டிருந்தேன் என்று வைத்துக்கொள்வோம். பாருங்கள்? வெறும்... "இது விசித்திரமாக இருக்கிறது" என்று நான் நினைத்தேன். 73 அது வந்துகொண்டே இருந்தது. தண்ணீரில் ஏதோ ஒரு சிறிய வஸ்து அந்தப் பக்கமாக மேலெழும்புவதை நான் கவனித்தேன், அவன் என்னிடம் வந்து, பின்னர் அந்தப் பக்கமாகத் திரும்பினான். பின்னர் அவன் கீழே சென்று, இந்த வழியாகத் திரும்பி வருவான், "ப்ளட், ப்ளட், ப்ளட்," பின்னர் அந்த வழியாகத் திரும்பி, மீண்டும் வருவான். எனக்கு இது புரியவில்லை என்று நான் சொன்னேன். 74 ஏதோ ஒன்று என் அருகில் வந்து, "இங்கே பார்" என்று சொன்னது. நான் பார்த்தேன், தண்ணீரில் வலதுபுறமாகத் திரும்பும் ஒரு சாலை இருந்தது. இடதுபுறமாகத் திரும்பும் ஒன்று இருந்தது. "அவர் உனக்குச் சொல்ல முயற்சிப்பது என்னவென்றால், 'இடதுபுறம் திரும்பு'" என்று சொன்னது. 75 பின்னர், நான், "சரி என்ன?" என்று கேட்டேன். நான் சுயநினைவுக்கு வந்தேன். நான் நினைத்தேன், "சொல்லுங்கள், அது ஒரு கனவா? அல்லது நான்... கர்த்தருடைய ஆவி என்மேல் வந்தாரா?" என் வாழ்நாள் முழுவதும் முதல் முறையாக அது அப்படிச் செய்தது. "நான் இதுவரை பார்த்திராத மிக விசித்திரமான காரியம் அது" என்று நான் நினைத்தேன். 76 நான் என் மனைவியை எழுப்பினேன், நான், "அன்பே, ஏதோ நடந்திருக்கிறது. ஒரு தரிசனத்தை அறிவிப்பதா, அல்லது நான் தூங்கி விட்டேனா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரியவில்லை" என்று சொன்னேன். நான் சொன்னேன், "தூக்கத்திலிருப்பதாகக் கருத முடியாத அளவுக்கு இது மிகவும் தெளிவாகத் தோன்றுகிறது. ஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை." அது என்னவென்று நான் அவளிடம் சொன்னேன். 77 "ஓ," நான் சொன்னேன், "அது ஒரு கனவு என்றுதான் நாம் நினைக்க வேண்டும், ஏனென்றால் நான் விழித்திருந்தேன்," நான் சொன்னேன், "மேலும் நான் மீண்டும் தூங்கி யிருக்கலாம். பாருங்கள்?" நான் சொன்னேன், "எனக்குத் தெரியவில்லை. என்ன நடந்தது என்று என்னால் சொல்ல முடியாது." 78 சில நிமிடங்களில், நாங்கள் வெளியே சென்றோம், காலை உணவுக்கு அழைக்கப் பட்டோம், காலை உணவுக்குப் பிறகு, நாள் முழுவதும், நான் சொல்லிக்கொண்டே இருந்தேன், "இப்போது அது எனக்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது." நான் அதை என் மனதிலிருந்து அகற்ற முயன்று, "ஓ, அது... நான் அதை வெறும் கனவாகக் கண்டேன்" என்று சொன்னேன். ஒரு கனவின் மீது நம்பிக்கை வைக்க முடியாது. அது உங்களுக்குத் தெரியும். ஆகவே நான், "அது ஒரு கனவு. அது அதுவல்ல" என்று சொன்னேன். ஆனால் நான் சொன்னேன், "அது, என்னுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்." 79 நான் சிகாகோவுக்குச் சென்றபோது, நான் சகோதரர் பேக்ஸ்டரை அழைத்தேன், நான் சொன்னேன், "சகோதரர் பேக்ஸ்டர், மிகவும் விசித்திரமான விஷயம், ஏதோ ஒன்று என்னை இடதுபுறம் திரும்பச் சொல்கிறது." "எனக்குத் தெரியவில்லை" என்று நான் சொன்னேன். அதற்கு அவர், "சரி..." என்று சொன்னார். நாங்கள் அவசரத்தில் இருந்தோம், அப்படியே தொடர்ந்து சென்றோம். நாங்கள் இங்கே வந்தோம். 80 பின்னர் நான் இங்கே வந்தபோது, மறுநாள் பரிசுத்த ஆவியானவர் என்னைப் பிடித்தார், "உன்னை இடதுபுறம் திரும்பச் சொன்னேன்." சரி, பின்னர், என் அறையில் காரியங்கள் செல்லும் விதத்தைப் பற்றி நான் ஒருவகையில் குழப்பமடைந்திருந்தேன். கூட்டத் தில் தேவனுடைய ஆவியானவர் சரியாகச் செயல்படுவதாகத் தெரியவில்லை. சகோதரர் பேக்ஸ்டர் வந்து, "சகோதரர் பிரன்ஹாம்?" என்று அழைத்தார். 81 நான் சொன்னேன், "ஆம்," நான் சொன்னேன்... இப்போது, அந்த... நிச்சயமாக தேவனுடைய வரம், அது எங்கும் செயல்படும். அது வரங்களும் அழைப்புகளும், மனஸ்தாபம் இல்லாதவைகள். பார்க்கிறீர்களா? நீங்கள் அதைக் கொண்டு என்ன செய்கிறீர்கள் என்பதற்கு தேவன் உங்களைப் பொறுப்பாளி யாக்குவார். பார்க்கிறீர்களா? ஆகவே பின்னர், நான், "ஏதோ தவறு இருக்கிறது" என்று சொன்னேன். நான் சொன்னேன், "ஒரு சிறிய கலையரங்கத்தில் இருபத்தி ஐந்நூறு பேருக்கு மேல் அமர முடியாது. அங்கே அந்தச் சிறிய குழு இருக்கிறது." நான், "அது... ஆனால் அது அதுவல்ல, சகோதரர் பேக்ஸ்டர்" என்று சொன்னேன். நான், "ஏதோ தவறு இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர்..." என்றேன். அவர், "சகோதரர் பிரன்ஹாம், என்னால் பேசக்கூட முடியவில்லை" என்று சொன்னார். 82 மேலும் நான் சொன்னேன், "என்ன தவறு என்று எனக்குத் தெரியவில்லை." மேலும் நான், "என்னால் உங்களிடம் சொல்ல முடியாது" என்று சொன்னேன். மேலும் நான், "சரி, நான் நாளை மதிய நேரத்தை எடுத்துக்கொண்டு, என்னை மூடிக்கொண்டு, தேவனுக்கு முன்பாகக் காத்திருக்கப் போகிறேன்" என்று சொன்னேன். அப்போதுதான் அவர் என்னிடம் சொன்னார். நான் மனஸ்தாபப்பட்டேன். பின்னர் நாங்கள் ஊழியரை அழைத்தோம். ஊழியர்களில் ஒருவரான, சகோதரர் ஃப்ளோ மேலே வந்தார், சகோதரர் பேக்ஸ்டர், "நீங்கள் அவரிடம் பேசுவீர்களா?" என்று கேட்டார். 83 நான் சொன்னேன், "ஆம். நான் சகோதரர் ஃப்ளோவிடம் பேசுவேன்," நான் சொன்னேன், "சகோதரர் பேக்ஸ்டர், எனக்குத் தெரியாது." பின்னர் நான் சொன்னேன், "அந்த லேக் மிச்சிகன் வரை மேலே வருகிற, அந்த நீல நிறத் தண்ணீர் அந்தப் பக்கமாகத் திரும்பியதை அவர் எனக்கு வெளிப்படுத்தின பிறகு நிச்சயமாக நான் அதைப் பார்க்கிறேன்." நான் சொன்னேன், "நிச்சயமாக! உலகத்தில் எனக்கு என்ன நேர்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை, சகோதரர் பேக்ஸ்டர், அது ஒரு தரிசனம் என்று நான் அடையாளம் கண்டு கொள்ளவில்லை." நான் சொன்னேன், "என்னை மன்னிக்கும்படி நான் தேவனிடம் கேட்டிருக் கிறேன்; என்னை மன்னிக்கும்படி நான் அவரிடம் கேட்டிருக்கிறேன். நான் கூட்டத்தில், அல்லது, வாரத்தின் தொடக்கத்தில் அதைப் பேசியதை நீங்கள் கேட்டீர்கள்." நான், "நான் ஏன் அப்படிச் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை" என்று சொன்னேன். 84 பின்னர் சகோதரர் ஃப்ளோ மேலே வந்தார், மேலும் அறையில் அமர்ந்துகொண்டு, எந்தவொரு குழுவிற்கும் ஒரு சிறந்த போதகரைப் போல, அவர் அதைப்பற்றி விவாதித்தார். அவர், "சகோதரர் பிரன்ஹாம், எனக்கு... தேவன் இதைச் செய்தார் என்று நான் அறிவேன்" என்று சொன்னபோது, நான், "உங்கள் வார்த்தையை நான் மறுக்கவில்லை, சகோதரர் ஃப்ளோ" என்று சொன்னேன். அவர், "ஆனால் இங்கே பாருங்கள்" என்று சொன்னார். பின்னர் சகோதரர் பேக்ஸ்டர், "இப்போது, சகோதரர் பிரன்ஹாம், நாம் ஊழியரை, இந்தச் சகோதரரை இங்கே, பரிசீலனையில் வைத்திருக்கிறோம்" என்று சொன்னார். நான், "ஆம். அது சரி" என்று சொன்னேன். "ஒத்துழைக்கும் மீதமுள்ள ஊழியர்கள், பதினான்கு சபைகள், நாம் அவர்களைப் பரிசீலனையில் வைத்திருக்கிறோம்" என்று சொன்னார். 85 நான் சொன்னேன், "அது சரி, சகோதரரே..." அந்தச் சமயத்தில் பரிசுத்த ஆவியானவர், நான் அதை உணர்ந்தேன். நான் தேவனுடைய ஊழியன் என்று நீங்கள் நம்பினால், இப்போது எனக்குச் செவிகொடுங்கள். சர்வ வல்லமையுள்ள தேவன், தென் ஆப்பிரிக்காவின் கிளர்க்ஸ்டார்ப்பில் நான் இருந்த அதே சிகரத்திற்கு என்னை மீண்டும் கொண்டு வருவதற்காக, என் வாழ்வில் முதல்முறையாக, அந்தத் தரிசனத்தில் நான் ஒருவகையில் குழப்பமடைவதற்கு அனுமதித்திருந்தார். நான் அங்கே இருந்தேன்; ஊழியர் குழு, மற்றும் இவை அனைத்தும் பரிசீலனையில் இருந்தன, மேலும் மேலாளர் கூட ஊழியர் குழுவிற்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்தார், மேலும் தேவனைச் சேவிப்பதா, தேவன் செய்ததைச் செய்வதா, அல்லது ஊழியர்கள் சொன்னதைச் செய்வதா என்று எனது தெரிவை மேற்கொள்வதற்கு இதோ நான் இங்கே நின்று கொண்டிருந்தேன். அதுதான் என்னுடைய இடமாக இருந்தது. நான்... தேவனுடைய கிருபை இறங்கி வந்தது. 86 நான் சொன்னேன், "சகோதரர்களே, நான் உங்களை நேசிக்கிறேன். அது நமக்குத் தெரியும், மேலும் தேவன் அதை அறிவார், என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன்." நான் சொன்னேன், "ஆனால் ஏரியின் மறுபக்கத்தில் அங்கே செல்லும்படி பரிசுத்த ஆவியானவர் என்னிடம் சொல்கிறார்." மேலும் நான் சொன்னேன், "நான் ஆப்பிரிக்காவில் செய்ததைப் போல, ஏதேனும் நடக்கும் வரை காத்திருக்கப் போவதில்லை," நான் சொன்னேன், "நான் ஏரியின் மறுபக்கத்திற்குச் செல்கிறேன்." 87 ஆகவே பின்னர், நான் சொன்னேன், "நான் உங்களை நேசிக்கிறேன். மேலும் தேவன் அதை அறிவார், ஆனால் நான் தேவனுக்குக் கீழ்ப்படிந்தாக வேண்டும். மேலும் நான் இதை மீண்டும் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று அவருக்கு வாக்களித்தேன்." மேலும் நான், "நான் அதைச் செய்தே ஆக வேண்டும்" என்று சொன்னேன். மேலும் நான், "இப்போது, சகோதரர் பேக்ஸ்டர், உறுதிப்படுத்துவதற்காக, அங்கே ஒரு அழைப்பை மேற்கொள்ளுங்கள்" என்று சொன்னேன். 88 மேலும் அவர் அங்கே அழைப்பை மேற்கொண்டதுமே, அவர்கள் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள், கலையரங்கம் மற்றும் அனைத்தும், காத்துக்கொண்டிருந்தன. அது எப்படி இருந்தது என்று பார்த்தீர்களா? மிகத் துல்லியமாக! நான் சொன்னேன், "இப்போது, நாம் இந்தச் சகோதரர்களை இதுபோல நிற்க வைத்துவிட்டுச் செல்ல விரும்பவில்லை, நாம் இந்த வாரத்தை அவர்களுடன் இங்கே முடிப்போம்." 89 இப்போது, சகோதரர் ஃப்ளோ, அவர் இப்போது எங்கேயாவது அமர்ந்து எனக்குச் செவிகொடுத்துக் கொண்டிருப்பார் என்று நான் நினைக்கிறேன், அவர் மிகச் சிறந்த கிறிஸ்தவ கனவான். அவர் தமது சபைக்காகப் போராடிக் கொண்டிருந்தார், நிச்சயமாக, மேலும் தமது கௌரவத்திற்காகவும். மக்கள் இங்கே இருந்தால், இந்தக் கூட்டம், மற்றும் பலவற்றைக் குறித்து மக்களிடம் சொல்லியிருப்பதாக அவர் சொன்னார். நான் சொன்னேன்... அவர் கேட்டார், "பொதுமக்களைப் பற்றி நான் என்ன செய்வது?" 90 இப்போது, அவர் கூட்டத்தை ஏற்பாடு செய்த பிறகு அது ஒரு கடினமான விஷயம் என்று நான் அறிந்திருந்தேன். அது சகோதரர் பேக்ஸ்டரின் ஒரு சறுக்கலாக இருந்தது. அவர் ஆரம்பத்திலேயே கூட்டத்தை அதுபோல அமைத்திருக்கக் கூடாது. எங்களுக்கு இருந்த ஒப்பந்தத்தின்படியே அவர் அதை அமைத்திருக்க வேண்டும். ஆனால் மற்ற கூட்டங்கள் அனைத்தும் முழுமையாக நடந்தேறியதை அவர் பார்த்தார், ஒருவேளை இதுவும் அதுபோலவே இருக்கும் என்று நினைத்தார். 91 ஆகவே அவர் சொன்னார், அவர், நிச்சயமாக, அவர் அப்படிச் செய்யக் குறிக்கவில்லை என்று சொன்னார். "இது முதல், நான் ஒருபோதும் அதைச் செய்யமாட்டேன், அதுபோல மீண்டும் அமைக்க மாட்டேன். பரிசுத்த ஆவியானவரின்படியே அது இருக்கும் படி நான் விட்டுவிடுவேன்" என்று சொன்னார். 92 பின்னர், என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். பின்னர்... சகோதரர் ஃப்ளோவிடம், அவர் சொன்னார், "பாருங்கள், சகோதரர் பிரன்ஹாம், தேவன் ஏன் எங்கள் ஜெபத்திற்குப் பதிலளித்தார், பின்னர் இந்த எல்லாக் காரியங்களையும் இங்கே சாத்தியமாக்கினார், பின்னர் திசையைத் திருப்பி உங்களை அனுப்புகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை." 93 நான் சொன்னேன், "சகோதரர் ஃப்ளோ, இந்த நகரத்தில் உங்களுக்கு என்ன தேவை என்று உங்களுக்குத் தெரியுமா?" இப்போது, நாம் இங்கே இருக்கிறோம், நண்பர்களே, நான் தேவனுக்குப் பொறுப்பாளியாக இருக்கிறேன். "இந்த நகரத்தில் உங்களுக்குத் தேவையானது ஒரு நல்ல பழங்கால, சுவிசேஷ பரிசுத்த ஆவியின் அசைவு இந்த நகரத்தில் தேவை. உங்களுக்கு ஒரு எழுப்புதல் தேவை, ஒரு சுகமளிக்கும் கூட்டம் அல்ல. மக்களை மீண்டும் ஆவிக்குரிய வழியில் கொண்டுவர உங்களுக்கு ஒரு எழுப்புதல் தேவை. இப்போது, நிச்சயமாக... இப்போது, நான் உங்களை நேசிக்கிறேன்." ஆனால், நினைவில் கொள்ளுங்கள், நண்பர்களே, நான் இயேசு கிறிஸ்துவுக்குக் கடமைப் பட்டிருக்கிறேன். உங்களுக்கு ஒரு எழுப்புதல் தேவை. பார்க்கிறீர்களா? நான் சொன்னேன், "இங்கே பாருங்கள். நீங்கள்..." அவர் சொன்னார், "சரி, கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ளலாம்," ஆனால், "விட்டுச் செல்வது..." என்று சொன்னார். 94 நான் சொன்னேன், "பிலிப்பைப் பாருங்கள், அவன் அதுவரை பெற்றிராத மிகப்பெரிய எழுப்புதலைக் கொண்டிருந்தான், பரிசுத்த ஆவியானவர் அவனிடம், 'அங்கிருந்து வெளியேறி வனாந்தரமாகிய காசாவுக்குப் போ!' என்று சொன்னார். அது சரிதானே? அவன் மீண்டும் திரும்பி வரவே இல்லை. அவன் போய்விட்டான். பரிசுத்த ஆவியானவர் அவனை எடுத்துக்கொண்டு போய்விட்டார், அந்தக் கூட்டத்தை அங்கேயே விட்டுவிட்டார். பிலிப்பு, அவனது... எழுப்புதல், இந்த எழுப்புதலைக் கொண்டிருந்தான். இப்போது, நான் சொன்னேன், 'மேலும்...'" 95 அவர் திரும்பினார், மேலும் பரிசுத்த ஆவியானவர் முதலில் சகோதரர் பேக்ஸ்டர் மீது அசைவாடினார். அந்த ஒளி அறையில் கீழே இறங்கி, சகோதரர் பேக்ஸ்டர் மீது நகர்வதை நான் கண்டேன். அவர் என்னை சகோதரர் பேக்ஸ்டரிடம் ஏதோ சொல்ல வைப்பார் என்று நான் நினைத்தேன், ஆனால் அது திசைமாறி சகோதரர் ஃப்ளோவிடம் வந்தது. அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை நான் அங்கே கண்டேன். நான் சொன்னேன், "இப்போது, சகோதரர் ஃப்ளோ, நீங்கள் இப்போது நினைத்துக்கொண்டிருக்கும் வேதவசனம், எசேக்கியாவிடம் சென்ற அந்த ஏசாயாவைப் பற்றி நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தீர்கள்." 96 அவர் சொன்னார், "நான் அதைத்தான் நினைத்தேன். அது மிகச்சரி." உறுதிப்படுத்துதல், நிரூபிப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் அங்கே இருந்தார், நான் சொன்னேன், "இங்கே பாருங்கள், அங்கே ஒரு உண்மையான வேதவசனம் இருக்கிறது." நான் சொன்னேன், "தேவன் ஏசாயாவிடம், 'அங்கே மேலே போய் ராஜா எசேக்கியாவிடம் சொல், உன் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்து, ஏனென்றால் நீ இந்தப் படுக்கையிலிருந்து இறங்கி வர மாட்டாய். நீ சாகப்போகிறார்' என்று சொன்னார். அது சரிதானே?" 97 இப்போது, இதை ஒரு கணம் எடுத்துக்கொள்வோம். இப்போது, முதலாவதாக உங்களுக்குத் தெரியும், இதோ மக்கள் அனைவரும் வருகிறார்கள். இதோ இங்கே உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், ராஜாவின் அரண்மனைக்கு அருகில் நின்று கொண்டிருக் கிறார்கள். வாசலில் காவலர்கள் இருக்கிறார்கள். வெளியே ஏழை மக்கள் நின்று கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இதோ தீர்க்கதரிசி, கர்த்தருடைய வார்த்தையுடன் பார்க்கச் செல்கிறார். வெளியே திரும்பி வருகிறார், மற்றும்... ராஜாவின் பிரதிநிதிகள் அனைவரும் அங்கே நின்று, "தேவனுடைய தீர்க்கதரிசியே, கர்த்தருடைய வார்த்தை உனக்குள் வாசமாயிருக்கிறது என்று நாங்கள் அறிவோம். ராஜாவைப் பற்றி என்ன?" என்று கேட்கிறார்கள். "அவர் அந்தப் படுக்கையிலிருந்து இறங்கி வரப்போவதில்லை. கர்த்தர் இவ்வாறாக உரைக்கிறார். அவர் அந்தப் படுக்கையிலேயே சாகப்போகிறார்." சரி. அது அதைத் தீர்த்து வைத்தது. 98 வாசல்காப்போனிடம் நடந்து வெளியே செல்கிறார், வாசல்காப்போன், "தேவனுடைய தீர்க்கதரிசியே, எங்கள் ராஜாவைக் குறித்து கர்த்தர் என்ன சொல்கிறார்? அவர் ஒரு நீதிமான். அவர் தேவபக்தியுள்ள மனிதர். மேலும் அவர் அங்கே படுக்கையில் படுத்திருக்கிறார். அவரைக் குறித்து கர்த்தர் என்ன சொல்கிறார்?" என்று கேட்பதை என்னால் பார்க்க முடிகிறது. "கர்த்தர் இவ்வாறாக உரைக்கிறார், அவர் அந்தப் படுக்கையிலேயே சாகப்போகிறார், படுக்கை யிலிருந்து இறங்கி வரமாட்டார்." 99 ஏழை மக்கள் இருக்கும் இடத்திற்கு நடந்து வெளியே செல்கிறார், அவர்கள் அனைவரும் அங்கே வெளியே நின்று படுக்கையில் படுத்திருக்கும் நீதிபரரான ராஜாவுக்காக அழுதுகொண்டிருக்கிறார்கள். "உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசியே," அவர்கள் அவர்மீது நம்பிக்கை வைத்திருந் தார்கள், ஒரு தீர்க்கதரிசியாகத் தமக்குரிய கௌரவத்துடன் இருந்த ஏசாயாவிடம், "கர்த்தர் என்ன சொல்கிறார்? கர்த்தரைத் தன் வாயில் கொண்டிருக்கிற தேவனுடைய தீர்க்கதரிசியே, எங்கள் ராஜாவைப் பற்றிக் கர்த்தர் என்ன சொல்கிறார் என்று எங்களுக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டார்கள். "கர்த்தர் இவ்வாறாக உரைக்கிறார், அவர் அந்தப் படுக்கையிலேயே சாவார். அவர் படுக்கையிலிருந்து இறங்கி வரமாட்டார்." தீர்க்கதரிசி உண்மையைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 100 எசேக்கியா தன் முகத்தைச் சுவரின் பக்கம் திருப்பிக்கொண்டு மிகவும் அழுதான். "ஆண்டவரே, என்னை நினைத்தருளும். நான் உமக்கு முன்பாக உத்தம இருதயத்தோடே நடந்து கொண்டேன்" என்று சொன்னான். அவன் இன்னும் பதினைந்து வருடகால வாழ்வுக்காக ஜெபித்தான். அப்போது தீர்க்கதரிசி போன பிறகு... இப்போது, தேவனின் ஒழுங்கைக் கவனியுங்கள். அவர் ஏன் எசேக்கியாவிடம் நேரடியாகத் திரும்பப் பேசவில்லை? எசேக்கியா அவரிடம் பேசிக்கொண்டிருந்தான். அது அவருடைய ஒழுங்கு அல்ல. எசேக்கியா ஒரு நீதிமான் என்று நீங்கள் நம்புகிறீர்களா? எத்தனை பேர் அதை நம்புகிறீர்கள், உங்கள் கையை உயர்த்துங்கள். நிச்சயமாக, அவன் தேவனை உண்மையாகத் தொழுது கொள்ளு கிறவனாக இருந்தான். மேலும் அவன் யெகோவாவுடன் முகமுகமாகப் பேசினான். அதை நீங்கள் நம்புகிறீர்களா? யெகோவா அவன் ஜெபத்தைக் கேட்டார். 101 சரி, அவர் ஏன், "இப்போது, எசேக்கியாவே பார், நான் உனக்குச் செவி கொடுத்தேன். இப்போது, நீ படுக்கையிலிருந்து எழுந்து வருவாய். இப்போது, ஏசாயா வெளியே போய் அந்தத் தீர்க்கதரி சனத்தையெல்லாம் உரைத்து விட்டான், ஆனால் நான், நான்-நான் உனக்குச் சொல்கிறேன், நீ படுக்கையிலிருந்து எழுந்து வருவாய்" என்று வெறுமனே சொல்லவில்லை? 102 அவர் ஏன் அப்படிச் செய்யவில்லை? அது தேவன் செயல்படும் விதம் அல்ல. அவர் தீர்க்கதரிசியிடம் திரும்பிச் சென்று, "நீ திரும்பிப்போய், நான் அவன் ஜெபத்தைக் கேட்டேன் என்றும், அவன் பிழைப்பான் என்றும் அவனிடம் சொல்" என்றார். இப்போது, இதோ தீர்க்கதரிசி திரும்பி நடந்து வருகிறார். "ஓ, நாங்கள் இருதயம் நொறுங்கியிருக்கிறோம்." சரி, இல்லை, ஏசாயா அந்த மக்களைத் திரும்பச் சந்திக்க வேண்டுமே. "இல்லை, அது-அது இப்போது மாற்றப்பட்டுவிட்டது. அது இப்போது மாற்றப்பட்டுவிட்டது, ஏனென்றால் அவன்-அவன் பிழைப்பான், சாகமாட்டான்." வாசல் காப்போனிடம் உள்ளே செல்கிறார், "ஏசாயாவே, என்ன விஷயம்? என்ன-என்ன காரியம்?" "அவன் பிழைப்பான், சாக மாட்டான்." உயர் பதவியில் உள்ளவர்களிடம் நடந்து செல்கிறார். "என்ன விஷயம்?" "அவர் பிழைப்பார்." அவர் சாகப்போகிறார் என்று சற்று முன்பு சொன்ன பிறகு. அது சரிதானே? என்ன மாற்றத்தை உண்டாக்கியது? 103 ஜெபம் காரியங்களை மாற்றுகிறது அது சரிதானே? மரணத்திலிருந்து ஜீவனுக்கு; ஜெபம் மாற்றுகிறது. மக்கள் சம்பந்தப்பட்ட வரை, திரும்பிச் செல்வதற்கு அந்தத் தீர்க்கதரிசி மிகவும் சங்கடப்பட்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் தேவன் தனக்குச் சொன்னதை அவர் செய்தே ஆக வேண்டும். 104 இப்போது, கவனியுங்கள். இவைகளில் சில, சுற்றிலும் நடந்து கொண்டிருக்கிற... நீங்கள் எப்போதும் தேவனுடைய முகத்தைத் தேடுங்கள். மேலும் தேவன் உங்களுக்குச் சொல்வதற்கு முரணாக யார் எதைச் சொன்னாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள் அதை நம்ப வேண்டாம், நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் அதைச் செய்வீர்களா? அவர் யாராக இருந்தாலும், அவர் எவ்வளவு நீதிமானாக இருந்தாலும், அவர் எவ்வளவு பெரிய போதகராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும், அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர் தேவனால் அனுப்பப்பட்டவராக இருக்கலாம், தேவனுடைய உண்மையான, மெய்யான, நியமிக்கப்பட்ட தீர்க்கதரிசியாக இருக்கலாம், ஆனால் தேவன் அந்தத் தீர்க்கதரிசிக்கு முரணாக ஏதேனும் ஒன்றை உங்களிடம் சொன்னால், நீங்கள் அந்தத் தீர்க்கதரிசியை நம்ப வேண்டாம். நீங்கள் தேவனை நம்புங்கள். அது உண்மை என்று எத்தனை பேர் நம்புகிறீர்கள்? 105 1 இராஜாக்கள் 13-ஐ வாசியுங்கள். ஒரு இளம் தீர்க்கதரிசி அங்கே பெத்தேலுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் உரைக்கச் சென்றார், மேலும் சில அற்புதங்களைச் செய்தார், அப்போது கர்த்தர், "நீ புசியாமலும் குடியாமலும், நீ உள்ளே சென்ற வழியிலிருந்து வேறொரு வழியாகத் திரும்பி வா" என்று சொன்னார். 106 மேலும் தேவனுடைய ஒரு உண்மையான தீர்க்கதரிசி சென்று அந்தத் தீர்க்கதரிசியை வஞ்சித்தான். அது சரிதானே? உண்மையாக இருப்பது நல்லது. அவன், "கர்த்தருடைய தூதன் என்னைச் சந்தித்து, நீ என் வீட்டுக்கு வரும்படி உன்னிடம் சொல்லச் சொன்னார். அவர் உன்னைச் சந்தித்த பிறகு என்னைச் சந்தித்தார்" என்று சொன்னான். அந்தத் தீர்க்கதரிசி, அந்தத் தீர்க்கதரிசியை நம்பி, திரும்பிச் சென்றார். அவருக்கு என்ன நடந்தது? ஒரு சிங்கம் அவரைக் கொன்றது. அது சரிதானே? அந்த முதிர்ந்த தீர்க்கதரிசி அதற்காக அழுதார். நிச்சயமாக, ஏனென்றால் அவர் தேவனுக்குப் பதிலாக ஒரு மனிதனுக்குச் செவிகொடுத்தார். 107 யார் எதைச் சொன்னாலும், முதலில் தேவனை நம்புங்கள். தேவன் நேற்றும், இன்றும், என்றும் மாறாத அதே தேவனாக இருக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாத அதே சுகமளிப்பவராக இருக்கிறார். 108 "நீங்கள் எவைகளை விரும்புகி றீர்களோ, நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அவைகளைப் பெற்றுக்கொண்டோம் என்று நம்புங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்." அதை நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால், எந்த நபர், "தெய்வீக சுகம் சரியல்ல" என்று சொன்னாலும், எந்த நபர், "இது சரியல்ல" என்று சொன்னாலும், அதை எடுத்துக் கொள்ளுங்கள், தேவனை அவருடைய வார்த்தையின் படியே நம்புங்கள். "எந்த மனிதனுடைய வார்த்தையும் பொய்யாகவும் என்னுடையது மெய்யாகவும் இருக்கட்டும்" என்று அவர் சொன்னார். அது சரிதானே? 109 இப்போது, நண்பர்களே, தேவன் செய்யச் சொன்னதைச் செய்யாததற்காக நீங்கள் என்னைக் குறை சொல்ல முடியாது. "சகோதரர் பிரன்ஹாம், தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கு, எங்கள் ஜெபங்கள் உங்களுடன் இருக்கின்றன" என்று மெய்யான உண்மையான கிறிஸ்தவர் சொல்வார் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் இந்நாட்களில் ஏதோ ஒரு நாளில், நான் அங்கே நிற்க வேண்டும். 110 மேலும் அன்று காலையில் அந்த அறையில் நான் எடுத்த அந்த முடிவு... நீண்ட காலத்திற்குப் பிறகு... என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியாது... அது அதை அங்கேயே காப்பாற்றியது. அது தேவனுடைய கிருபையினால்தான், ஆனால் தேவன் என்னை மீண்டும் அதே இடத்திற்கு, அதே காரியத்திற்கு, அதே வகையான... அனைத்தும் மிகத் துல்லியமாக அதே போல, மீண்டும் அதே இடத்திற்குச் செல்ல அனுமதித்தார், மேலும் என் முடிவை எடுப்பதற்கு அங்கே தனியாக நிற்கும்படி, எல்லாவற்றையும் என்னை விட்டு விலக்கினார். 111 தேவனுக்கு ஸ்தோத்திரம், ஏனென் றால் என் முழு இருதயத்தோடும், என் முடிவு தேவனுடைய சித்தத்தின்படியே இருந்தது. என் முழு இருதயத்தோடும் நான் அதை நம்புகிறேன். 112 பேட்டில் கிரீக், நீங்கள் இதைப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். அழியாத கிறிஸ்தவ அன்புடன் நான் உங்களை நேசிக்கிறேன், அது உண்மையா இல்லையா என்பதை தேவன் நம்மை அறிவார். அது உண்மைதான். ஆனால் கவனியுங்கள். தேவன் தமது தெய்வீக சித்தத்தினால், வேறொன்றுக்கும் இல்லையென்றாலும், இங்கே பேட்டில் கிரீக்கில் சிறிது காலம் சுவிசேஷத்தைப் பிரசங்கிப் பதற்காகவாவது, என்றாவது ஒரு நாள் இங்கே பேட்டில் கிரீக்கிற்குத் திரும்பி வர எனக்கு வாய்ப்பளிப்பார் என்று நான் நம்புகிறேன். 113 மேலும் நான் உங்களை நேசிக்கிறேன். இது உங்கள் போதகர்கள் மீதோ, வேறொருவர் மீதோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த விடாதீர்கள். இது இப்படி அமைக்கப்பட்டதற்கான முதல் இடம், புரிதலுக்கு மத்தியில் ஒரு சிறிய பிழையாக இருந்தது, மேலும் இது... ஆனால் ஒரு கூட்டத்தில் எந்த நேரத்திலும், இது உண்மை என்று என் நிர்வாகத்திற்குத் தெரியும், தேவன் என்னை அழைத்தால், எவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அல்லது அது எதுவாக இருந்தாலும், நான் உடனே அதைச் செய்வேன், நான் தேவனுக்குக் கீழ்ப்படிந்தாக வேண்டும். 114 நான் செய்தது சரி என்று எத்தனை பேர் நினைக்கிறீர்கள்? நன்றி. இப்போது, சகோதர போதகர்களே, அரங்கம் முழுவதும் நூறு சதவீதம் இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். கிறிஸ்தவர்கள் சத்தியம் என்னவென்பதைப் பார்த்தால், அவர்கள் நம்புவார்கள் என்று எனக்குத் தெரியும். நண்பர்களே, நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். 115 நான் யாருக்கு முன்பாக நிற்கிறேனோ அந்த என் தேவனுக்கு இன்று இரவு தெரியும், அது... அது தெய்வீக சித்தம் என்று நான் அறிந்திருந்தால், இந்தக் காரியம் முழுவதும் உடைக்கப்பட்டு, இந்த நகரம் முழுவதையும் வாரித்துக்கக்கூடிய ஒரு எழுப்புதலை நான் காணும் வரை, அடுத்த ஆறு அல்லது எட்டு வாரங்களுக்கு இங்கேயே இந்த நகரத்தில் தங்க நான் விரும்புவேன். நான் அதைப் பார்க்க விரும்புகிறேன். தேவன் அதை அறிவார். மேலும் நானும் மனமுவந்திருக்கிறேன், ஆனால் நான் அவருடைய கரங்களில் வளையக்கூடியவனாக இருக்க வேண்டும், மேலும் அவர் எதைச் செய்யச் சொல்கிறாரோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.. 116 பிலிப்பு சமாரியாவில் தங்கியிருந் திருப்பான், அவன் மிகவும் மகிழ்ச்சியாகத் தங்கியிருந்திருப்பான். பிரசங்கித்தல், சுகமளித்தல், பிசாசுகள் அலறுதல், மற்றும் மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிடுதல் என அவன் எப்படிப்பட்ட ஒரு எழுப்புதலைக் கொண்டிருந்தான். ஆனால் எத்தியோப் பாவிலிருந்து கீழே வந்துகொண்டிருந்த ஒரு கறுப்பின மனிதனைச் சந்திப்பதற்காக, தேவன் அவனை அங்கிருந்து வெளியேறி வனாந் தரத்திற்குச் செல்லும்படி அழைத்தார். அது சரிதானே? அதன்பிறகு அவனைத் திரும்பிப் போக விடவே இல்லை. அவனிடம் சொன்னது என்ன? கர்த்தருடைய தூதன் அவனுக்குத் தோன்றினார். அது சரிதானே? "பிலிப்பு, இப்போது வெளியே வா, இங்கே காசாவுக்குப் போ" என்று சொன்னார். அது சரிதானே? 117 இப்போது, அன்று உயிரோடிருந்த அதே தேவன், இன்றும் உயிரோடிருக்கிறார். அவர் அதே காரியத்தைச் செய்கிறார். அது அவருடைய அதே சுபாவம். தேவன்... தம்முடைய அற்புதங்களைச் செய்வதற்கு, விசித்திரமான வழிகளில் கிரியை செய்கிறார். 118 நான் இப்போது இங்கே வேதவசனத்தை வாசிக்க விரும்புகிறேன். லூக்கா 5: பின்பு சம்பவித்தது என்னவென்றால்,... தேவவசனத்தைக் கேட்பதற்கு மக்கள் அவரை நெருக்கினபோது, அவர் கெனேசரேத்து கடலருகே நின்றுகொண்டிருந்தார், அப்பொழுது கடலருகே நின்ற இரண்டு படகுகளைக் கண்டார்: மீனவர்கள் அவைகளை விட்டு இறங்கி, தங்கள் வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள். அவர் அந்தப் படகுகளில் ஒன்றாகிய சீமோனுடைய படகில் ஏறினார், (நான் அதன்மேல் மையினால் குறியிட்டிருக்கிறேன், அது ஏறக்குறைய மறைக்கப்பட்டதற்குக் காரணம்; அது எனக்கு மிகவும் பிடித்த வேதப்பகுதிகளில் ஒன்று.), அது சீமோனுடையது, கரையிலிருந்து சற்றுத் தள்ளும்படி அவனை வேண்டிக்கொண்டார். பின்பு அவர் உட்கார்ந்து, படகிலிருந்து மக்களுக்குப் போதகம் பண்ணினார். அதைக்கேட்பதற்கு நீங்கள் அங்கே இருந்திருக்க விரும்பியிருக்க மாட்டீர்களா? ஓ! அற்புதமாக இருந்திருக்கும். இப்போது அவர் பேசுவதை முடித்தபோது, அவர் பேசுவதை முடித்தபோது, அவர் சீமோனை நோக்கி, ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். அதற்குச் சீமோன் பிரதியுத்தரமாக: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும்... ஒன்றும் அகப்படவில்லை: ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். அவன் அப்படிச் செய்தபோது, மீன்கள் திரளாய் அகப்பட்டது: வலை கிழிந்தது. அப்பொழுது மற்றப் படகிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படி சைகைக்காட்டினார்கள். அவர்கள் வந்து, இரண்டு படகுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். அப்பொழுது சீமோன் பேதுரு அதைக் கண்டபோது, (அல்லது மன்னிக்கவும்!) சீமோன் பேதுரு அதைக் கண்டபோது, அவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான். ஏனென்றால் அவர்கள் பிடித்த... மீன்களின் திரட்சியினால், அவனுக்கும் அவனோடு கூட இருந்த அனைவருக்கும் பிரமிப்பு உண்டானது: சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெ தேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே; இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாய் இருப்பாய் என்றார். அவர்கள் தங்கள்... அவர்கள் தங்கள் படகுகளைக் கரைக்குக் கொண்டுவந்தபோது, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 119 இந்த வார்த்தையைத்தான் நான் உங்களிடம் விட்டுச் செல்கிறேன். அந்த மீனவர்களைப் பாருங்கள், ஒரு கணம். அவர்களைப் பாருங்கள், ஏரி முழுவதும் இரவு முழுவதும் பிரயாசப்பட்டார்கள். அவர்கள் மீனவர்கள்; சந்திரனின் மாற்றத்தை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் நீரின் நேரத்தை அறிந்திருந்தார்கள், மேலும் அவர்கள் இரவு முழுவதும் வலை வீசியிருந்தார்கள், தொழில் முறை மீனவர்கள், ஆனால் ஒன்றையும் பிடிக்கவில்லை. எவ்வளவு சோர்வான நேரம். வெளியே வந்து தங்கள் வலைகளை அலசிக்கொண்டு, கரையில் அமர்ந்திருந்தார்கள். 120 ஒரு நிமிடம் இதை நாடகமாக்கலாம். பாருங்கள், அங்கே வருகிறவர்: முப்பது வயதுகளில் உள்ள ஒரு வாலிபர் வருவதை, கரையில் நடந்து வருவதை நான் காண்கிறேன். அவர் பார்ப்பதற்குச் சற்று வயது முதிர்ந்தவராகத் தெரிந்திருப்பார் என்று நான் கற்பனை செய்கிறேன், ஏனென்றால் தம்முடைய ஊழியம் தமக்கு மிகக் கடினமாக இருந்ததாக அவர் சொன்னார். கரையில் நடந்து வருகிறார், இரண்டு அல்லது மூன்று மனிதர்கள் அவருடன் நடந்து வருகிறார்கள். மேலும் அங்கே குன்றின் மேல் வெகு தொலைவில் மீனவர்களின் வலைகள் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள், "இதோ கலிலேயாவின் அந்தத் தீர்க்கதரிசி. நாம் கீழே போய் அவர் என்ன சொல்வார் என்று பார்ப்போம்" என்று சொல்கிறார்கள். அவர்கள் கரையில் கூடினார்கள். நான் பார்க்கிறேன்... அங்கே ஒரு மரக்கட்டையின் மேல் அமர்ந்திருக்கிறார்கள், அங்கே சீமோனும் மற்றவர்களும், வலைகளை அலசிவிட்டு, சோர்ந்துபோய் இருக்கிறார்கள். தேவவசனத்தைக் கேட்பதற்கு அவர்கள் அவரை நெருக்கினார்கள். 121 அவர், "நான் உங்கள் படகை ஒரு நிமிடம் பயன்படுத்திக் கொள்ளலாமா?" என்று கேட்டார். அவர் குதித்து, படகில் ஏறினார்; அவர்கள் சிறிது தூரம் தள்ளிக்கொண்டு போனார்கள். பின்னர் அவர் பேசி முடித்த பிறகு, "சீமோனே, நீங்களும் மற்றவர்களும் இங்கே வாருங்கள்" என்று சொன்னார். தேவன் ஒருபோதும் உங்களிடமிருந்து எதையும் கடனாக வாங்குவதில்லை, அவர் அதற்குக் கூலி கொடுக்காமல் இருப்பதில்லை. அது சரிதானே? அவர், "இங்கே வாருங்கள். இப்போது ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்கள் திரளாய் அகப்படும்படி உங்கள் வலையைப் போடுங்கள்" என்று சொன்னார். 122 அப்போது, சீமோன், "இப்போது, ஆண்டவரே, நாங்கள் இந்தத் தண்ணீரில் இரவு முழுவதும் வலைவீசித் தேடினோம். நாங்கள் ஒரு மீனைக்கூடப் பிடிக்கவில்லை. நாங்கள் ஒன்றையும் பிடிக்கவில்லை. நாங்கள் மீனவர்கள்; எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு இந்தக் கடல் தெரியும். நாங்கள் இங்கேயே வளர்ந்தவர்கள். எங்கள் பிதாக்கள் இங்கே வளர்ந்தவர்கள். மேலும் நாங்கள் இதிலிருந்து ஒன்றையும் எடுக்கவில்லை. அந்தத் தண்ணீரில் மீன்களே இல்லை" என்று சொன்னான். ஓ, என் தேவனே. "ஆகிலும், உம்முடைய வார்த்தையின் படியே, நான் வலையைப் போடுகிறேன்". இதோ பாருங்கள். 123 அவன் வலையைப் போட்டபோது, அது கடைசியாகக் கீழே விழுந்தது, அவன் இழுக்கவும் பற்றிக்கொள்ளவும் தொடங்கியபோது, அவன் இழுத்தபோது, மீன்கள், அவை துடிப்பதை அவன் உணரத் தொடங்கினான். அவை எங்கிருந்து வந்தன? அவை எப்படி அங்கே வந்தன? தண்ணீரில் மீன்களே இல்லாதிருந்தால், தேவனை அவருடைய வார்த்தையில் பற்றிக்கொள்வது தண்ணீருக்குள் மீன்களைக் கொண்டுவரும். 124 பாருங்கள், நண்பர்களே. நீங்கள் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு மருத்துவரின் அலுவலகத்திலும் சல்லடை போட்டுத் தேடியிருக்கலாம். இங்கே சுற்றிலும் இருக்கிற ஒவ்வொரு மருத்துவமனையிலும் நீங்கள் இருந்திருக்கலாம். நமக்கு மிகவும் பிரியமான சிறந்த மருத்துவர்கள் தங்களால் முடிந்த கடைசி மருந்துச் சீட்டைக் கொடுத்திருக்கலாம். நீங்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டீர்கள். நீங்கள் இந்த ஜெப வரிசையிலும், அந்த ஜெப வரிசையிலும், இந்த ஜெபக் கூட்டத்திலும், இதிலும் சென்றிருக்கலாம். 125 இன்று இரவு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இது சனிக்கிழமை இரவு. நாளை ஞாயிற்றுக்கிழமை. நாம் இதைச் சொல்வோம்: "ஆண்டவரே, நான் எல்லாவற்றையும் செய்துவிட்டேன், ஆனால் உம்முடைய வார்த்தையின்படியே, இன்று இரவு நான் வலையைப் போடப் போகிறேன். இன்று இரவு, நான் நம்பப் போகிறேன். நான் உம்மை உம்முடைய வார்த்தையின்படியே பற்றிக்கொள்ளப் போகிற நேரம் இது. 'நீங்கள் எவைகளை விரும்புகிறீர்களோ, நீங்கள் ஜெபம் பண்ணும் போது, அவைகளைப் பெற்றுக்கொண்டோம் என்று நம்புங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்' என்று நீர் சொன்னீரே. ஆண்டவரே, ஒவ்வொரு சந்தேகத்தையும், ஒவ்வொரு பயத்தையும் விட்டுவிட்டு, இன்று இரவு நான் வலையைப் போடுகிறேன். உம்முடைய வார்த்தையின்படியே, நான் வருகிறேன், ஆண்டவரே." உங்களால் அதைச் செய்ய முடியுமா? நாம் நம் தலைகளைத் தாழ்த்துவோம். 126 பரலோகப் பிதாவே, இப்போது உம்முடைய பரிசுத்த ஆவியானவர் ஒரு அற்புதமான விதத்தில் அசைவாடுவாராக. தேவனே, இதோ மக்கள் இங்கே படுத்திருக்கிறார்கள், இதோ, இன்று இரவு, இதோ கட்டில்களும் சக்கர நாற்காலிகளும் உள்ளே வருகின்றன. ஓ தேவனே, அவை வெறுமையாகி வீட்டுக்குப் போகட்டும். அவர்கள் நடந்து கொண்டும், துள்ளிக் குதித்துக்கொண்டும், தேவனைத் துதித்துக்கொண்டும் வீட்டுக்குப் போகட்டும். 127 மேலும், இங்கே ஏற்பட்டிருக்கும் இந்த விசித்திரமான சூழ்நிலையின் காரணமாக, ஆண்டவரே, இந்த நகரத்தில் அந்த எழுப்புதல் பரவத் தொடங்கும் விதமாக இன்று இரவு ஏதேனும் நடக்கட்டும், அது... இங்கே உம்முடைய ஊழியன் தேவையில்லை, ஆண்டவரே, பரிசுத்த ஆவியானவர் இங்கே இருப்பார். அவர்கள் இன்று இரவு ஜெபத்தில் தரித்திருந்து, வெற்றியைப் பெற்றுக்கொண்டால், நாளைக் காலையில் அவர்கள் தெருவில் சாட்சி கொடுத்துக்கொண்டும், தெருவில் முன்னும் பின்னும் நடந்து கொண்டும், தேவனை மகிமைப்படுத்திக் கொண்டும் இருப்பார்கள். மேலும் ஒவ்வொரு கள்ளச்சாராயக் கடையும் மூடப்படத்தக்கதான ஒரு பழங்காலத்து எழுப்புதல் இங்கே வெடிக்கட்டும். தேவனே, இன்று இரவு திறந்திருக்கும் அந்த இடங்களை மூடும், மேலும் தாய்மார்களின் பையன்கள் கிறிஸ்தவர்களாக மாறட்டும், தெருக்களில் நடந்துகொண்டிருக்கும் அந்த மகள்கள், மற்றும் அவர்கள் செய்யும் விதம்; தேவனே, நியாயத்தீர்ப்பு வருவதற்கு முன்பாக ஏதோ ஒன்று நடக்கட்டும். அதை அருளும், ஆண்டவரே. 128 மேலும் இன்று இரவு எனக்கு உதவும், என்னுடைய, நீர் தெய்வீகமாகக் கட்டளையிட்ட ஊழியத்தில் எனக்கு உதவும். பரலோகத் தரிசனத்திற்கு உண்மையாக இருக்க நான் முயற்சிக்கிறேன் என்பது என் இருதயத்தை நீர் அறிந்திருக்கிறீர். இப்போது, பிதாவே, பெரிய அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப்படும் படி அருளும். இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். 129 இவ்வளவு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதற்கு என்னை மன்னிக்கவும். நாம் நோயுற்றவர்களுக்காக ஜெபிப்பதற்கு, நேரடியாக ஜெப வரிசைக்குச் செல்வோம். நேற்றையதினம் மாலையில், நான் உங்களிடம் இதைக் கேட்டேன்: "நான் நோயுற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டுமா, மக்களை வெறுமனே வரிசையில் வரவழைத்து அவர்களுக்காக ஜெபிக்கட்டுமா?" என்று கேட்டேன். அவர் அதைத்தான் விரும்பினார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் உங்களிடம் கேட்டேன், உங்கள் தெரிவு வேறு விதமாக இருந்தது, அப்படியானால் நீங்கள் ஜெப வரிசையில் வராவிட்டால், நீங்கள் இருக்கும் இடத்திலியே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பார்க்கிறீர்களா? ஆகவே இப்போது, அது-அது உங்கள் தெரிவு, என்னுடையது அல்ல, உங்களுடையது. சரி. இப்போது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. (பில்லி, எங்கே...? மன்னிக்கவும். சரி. நீங்கள் எனக்குப் பின்னால் இருந்தது எனக்குத் தெரியாது. என்ன, ஜெப... E -யா (E)? ஈ-க்கள்? சரி. ஐம்பதிலிருந்து நூறு வரையா?). 130 சரி. பில்லி சிறிது நேரத்திற்கு முன்பு ஜெப அட்டைகளைக் கொடுத்தான். இன்று இரவு, நாம் ஐம்பதில் தொடங்குவோம், மேலும் எடுப்போம்... நாம் எத்தனை பேரை அழைத்துக் கொண்டிருக்கிறோம்? பதினைந்து பேரா? இன்று இரவு, நாம் சுமார் இருபத்தி ஐந்து பேரை அழைக்கலாம், ஒருவேளை இன்னும் கொஞ்சம் பெரிய வரிசையைப் பெற முடியுமா என்று பார்ப்போம், அல்லது, அவர்களை நிற்க வைக்க முடிந்தால், முழு ஐம்பது பேரையும் அழைக்கலாம். ஆனால் அத்தகைய வரிசையில் அவர்கள் அனைவரையும் நம்மால் முடிக்க முடியுமா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. நீங்கள் விரும்பினால், நாம் எடுக்கலாம்... தொடங்கு வதற்கு இருபத்தி ஐந்து பேர் என்ன என்று பார்ப்போம். 131 ஜெப அட்டை பி (B), அல்லது ஈ (E), E, E, ஐம்பதை யார் வைத்திருப்பது? ஜெப அட்டை ஈ, ஐம்பதை யார் வைத்திருப்பது? இப்போது, நாம் தொடங்கலாம். E, ஐம்பது, ஐம்பத்தொன்று, ஐம்பத்திரண்டு, ஐம்பத்து மூன்று, முதல் இருபத்தி ஐந்து பேருக்கு அப்படியே மேலே, எழுபத்தி ஐந்து வரை. உங்கள் எண்களின்படி, இங்கே இந்தப் பக்கத்தில் வரிசையில் நில்லுங்கள். இப்போது, இப்போது ஒருவருடைய ஜெப அட்டையை மற்றவர் பாருங்கள். இதோ அவற்றில் ஒன்று இங்கே இருக்கிறது. பார்க்கிறீர்களா? அது... [ஒலி நாடாவில் காலி இடம்] விசுவாசிக்க மட்டுமே செய்யுங்கள், விசுவாசிக்க மட்டுமே செய்யுங்கள், எல்லாம் கூடும், விசுவாசிக்க மட்டுமே செய்யுங்கள். இப்போது, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. பயபக்தியுடன் இருங்கள். யாரும் அசைய வேண்டாம். மிகவும் அமைதியாக அமருங்கள். அங்கும் இங்கும் அசைய வேண்டாம். ஜெபியுங்கள். ஜெபியுங்கள். 132 இது, ஒருவேளை, ஏதோ ஒரு சிறு குழந்தையின் தாயாக இருக்கலாம். அவள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கலாம். அவள் புற்றுநோயால் அரிக்கப்பட்டிருக்கலாம். அவளுக்கு ஏதேனும் தவறு நேர்ந்து அது அவள் உயிரைப் பறிக்கலாம். அவளுக்கு இருதயக் கோளாறு இருக்கலாம். அப்படி இருந்தால், அது முதல் எதிரி, நீங்கள் போகும்போது அதைவிட மோசமானது வேறில்லை. அது உங்கள் குழந்தையின் தாயாக இருந்தால், நீங்கள் மிகவும் உண்மையாக இருப்பீர்கள், அல்லது அது நீங்களாக இருந்தால், நீங்கள் மிகவும் உண்மையாக இருப்பீர்கள், ஆகவே ஜெபியுங்கள். நினைவில் கொள்ளுங்கள், இது யாருடையதோ, ஒருவருடையது. சரி. 133 இப்போது, அம்மா, நீங்கள் என்னிடம் ஒரு நிமிடம் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதாவது... நீங்கள் இதற்கு முன்பு கூட்டங்களில் இருந்திருக்கிறீர்களா? நீங்கள் வருவது இதுதான் முதல் இரவா? ஓ, அப்படியானால், இது ஒருவகையில்... உங்களுக்குச் சற்று விசித்திரமாக இருக்கலாம். நீங்கள் எப்போதாவது பைபிள் வாசிக்கிறீர்களா? வாசிப்பீர்களா? [சகோதரி சகோதரர் பிரன்ஹாமிடம் பேசுகிறார்] உங்கள் சகோதரி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் கூட்டங்களில் சுகமாக்கப்பட்டார். அது எங்கே நடந்தது? [சகோதரி மீண்டும் பேசுகிறார்.] ம்ம்-ஹூம். அவருக்கு என்ன பிரச்சனை? புற்றுநோய். அவருடைய சகோதரி எனது கூட்டங்களில் ஒன்றிற்கு விமானத்தில் வந்தார், ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து, அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரை விமானத்தில் அழைத்து வந்தார்கள், மேலும் அவர் கூட்டத்தில் சுகமாக்கப்பட்டார், மார்பில் கட்டிகளுடன் இருந்த புற்றுநோயிலிருந்து சுகமாக்கப்பட்டார், அதன் பிறகு அவருக்கு எந்தத் தொந்தரவும் இருக்கவில்லை. பார்க்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் நம்புவீர்கள். கூட்டம் எப்படிச் செயல்பட்டது என்று அவர் உங்களிடம் சொன்னாரா? கூட்டத்தில் பரிசுத்த ஆவியானவர் எப்படி அசைவாடினார் என்று? இருதயத்தின் இரகசியங்களை அறிதல், அநேகமாக அதுதான் அவருக்கு நடந்திருக்கும். அநேகமாக-... [சகோதரி மீண்டும் பேசுகிறார்.] அவருக்கு என்ன தவறு என்று நான் அவரிடம் சொன்னதாகவும், ஜெபம் செய்ததாகவும், அது அவரை விட்டு நீங்கியதாகவும் சொன்னார். 134 இப்போது அதே கர்த்தராகிய இயேசு இன்று இரவு இங்கே இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் அறிகிறார். அங்கே... மேலும் உங்களுக்கு நினைவிருக்கிறதா... நீங்கள் நம்புகிறீர்களா? நிச்சயமாக, அது தேவன் தான் என்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இப்போது, மேடையில் ஏதோ ஒன்று இருப்பதை நீங்கள் உணர்கிறீர்கள். நீங்கள் ஒரு பரிசுத்தமான, தூய ஜீவியத்தின் பிரசன்னத்தில் இருக்கிறீர்கள் என்பதை, அந்த ஏதோ ஒன்றை நீங்கள்-நீங்கள் அறிவீர்கள், உங்கள் சகோதரராகிய நான் அல்ல, நிச்சயமாக நான் இல்லை. ஆனால் அது ஒரு... நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பதைப் போல நான் ஒரு மனிதன் மட்டுமே. ஆனால் இது ஒரு ஆவிக்குரிய ஜீவியம். நீங்கள் அதை உணர்கிறீர்கள். நீங்கள்-நீங்கள் அதை அறிவீர்கள். 135 சரி இப்போது, எனக்கு உங்களைத் தெரியாது, என் வாழ்நாளில் நான் உங்களைப் பார்த்ததில்லை, ஆனால்... தேவன் உங்களை அறிவார். இங்கே பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் இருந்தால், அவர் எனக்கு வெளிப்படுத்த முடியும்... அவர் கிரியை செய்வதற்கான ஒரு வழியாக, அங்கே பின்னால் என்னைத் தெரிந்தெடுத்திருந்தால், அவர் தாம் எதை விரும்புகிறாரோ அதை எனக்கு வெளிப்படுத்த முடியும், அல்லது அவர் அதைத் தடுத்து நிறுத்தி, எதையும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம், அல்லது நீங்கள் எதை அறிய வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதை மட்டுமே அவர் உங்களிடம் சொல்லலாம். அது சரிதானே? அதாவது.... 136 இப்போது, இயேசு ஒருமுறை ஒரு பெண்ணுடன் நின்று, பேசிக்கொண்டிருந்தார், மேலும் அவர்... அவர் அவளிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அந்தக் கதை எப்படிப் போகிறது என்று உங்களுக்குத் தெரியும். அவள், "கிணறு ஆழமானது" என்று சொன்னாள். அவர், "சரி, நீ யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய் என்று உனக்குத் தெரிந்திருந்தால், நீ என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டிருப்பாய்" என்று சொன்னார். 137 மேலும் உரையாடலைத் தொடர்ந்தார். அவர் அவளிடம் சிறிது நேரம் பேசிய பிறகு, அவளுடைய பிரச்சனை எங்கிருக்கிறதோ நேராக அந்த இடத்திற்குச் சென்றார். "போய், உன் கணவனை அழைத்துக் கொண்டு வா" என்று சொன்னார். அவள், "எனக்குக் கணவன் இல்லை" என்றாள். "நீ சரியாகச் சொன்னாய், ஏனென்றால் உனக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள்" என்று சொன்னார். 138 அவள், "நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன்" என்று சொன்னாள். அவள் நகரத்திற்குள் ஓடிச்சென்று, "நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன ஒரு மனிதரை வந்து பாருங்கள். இவர் அந்த கிறிஸ்துதானே?" என்று சொன்னாள். பார்க்கிறீர்களா?. 139 இயேசு நகரத்திற்குள் பிரவேசித்தார், நாம் புரிந்துகொண்டபடி, அவர் அங்கே எந்த அற்புதங்களையும் செய்யவில்லை. நான் பேசிக்கொண்டிருந்த அந்தப் பிலிப்பு செய்வதற்காக அதை விட்டுவிட்டார். பார்க்கிறீர்களா? அவர் வெறுமனே உள்ளே சென்று அவர்களிடம் பேசத் தொடங்கினார். 140 அவர் புறப்பட்டுப் போனபோது, அவர்கள், "'இப்போது' அந்தப் பெண் சொன்னதினால் அல்ல, நாங்களே அவருடைய பேச்சைக் கேட்டதினால் அவரை விசுவாசிக் கிறோம். இவர் தேவனுடைய குமாரன் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று சொன்னார்கள். அது அந்தக் கூட்டத்தை, அல்லது அந்த நிலத்தை உடைத்தது தயார்படுத்தியது, பின்னர் பிலிப்பு கீழே சென்று பிரசங்கித்து, மக்களைச் சுகமாக்கினான். பார்க்கிறீர்களா? இயேசு அதைச் செய்வதற்கு வேறொரு வழியை வைத்திருந்தார். பார்க்கிறீர்களா? அவர் பிலிப்பைக் கீழே அனுப்புவார் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. 141 இப்போது, இன்று இரவிலும் அவர் அதே இயேசுவாகவே இருக்கிறார். அது சரிதானே? [சகோதரி மீண்டும் பேசுகிறார்] ஆம், சகோதரி, அவர் உங்களைச் சுகமாக்க வல்லவர். இப்போது, அவர்... அவரால் முடியும். பார்க்கிறீர்களா? இப்போது, நான் உங்களை ஒன்றில் திருத்த விரும்புகிறேன். அது பரவாயில்லையா? பாருங்கள்? அவர்... அவரால் அதைச் செய்ய முடியும் என்பது மட்டுமல்ல, அவர் அதை ஏற்கனவே செய்துவிட்டார். பார்க்கிறீர்களா? அதை விசுவாசிப்பது, அல்லது ஏற்றுக்கொள்வது உங்கள் விசுவாசத்தைப் பொறுத்தது. பாருங்கள். பார்க்கிறீர்களா? அவர் அதை ஏற்கனவே செய்துவிட்டார். அவரால் அதைப்பற்றி இனி ஒன்றும் செய்ய முடியாது, ஏனென்றால் நோய் என்கிற தண்டனை தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் கிடந்தது. இயேசு நேராக உள்ளே வந்து, முதுகில் அடிக்கப்பட்டார்: அவருடைய தழும்புகளால் நாம் சுகமாக்கப்பட்டோம். பார்க்கிறீர்களா? அப்படியானால் அதற்குக் கிரயம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது. அது நம்முடைய அவிசுவாசம்தான். "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" என்று இயேசு சொன்னார். இதோ இருக்கிறது. என் பெயர் கையெழுத்திடப்பட்ட காசோலை புத்தகம் இதோ இருக்கிறது. அதை நிரப்பி, பிதாவிடம் அனுப்புங்கள், அவர் அதை அங்கீகரிப்பார். அது எளிமையானது அல்லவா? 142 இப்போது பாருங்கள், அம்மா, நான் உங்களுடன் சிறிது நேரம் எடுத்துக் கொண்டதற்குக் காரணம், உங்களைக் கடந்து ஏதோ ஒன்று போவதை நான் கண்டேன். இப்போது-இப்போது, எனக்கு உங்களைத் தெரியாது என்று உங்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் பலமுறை மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறீர்களா அல்லது அதுபோல ஏதேனும்? நான்கு முறை மருத்துவமனைக்கு [சென்றிருக்கிறீர்கள்]. நீங்கள் உள்ளே போவதையும், வெளியே வருவதையும், உள்ளே போவதையும் வெளியே வருவதையும், அது போலப் பலமுறை நான் கண்டேன். அது சரிதானே? மேலும் உள்ளுறுப்பில் ஒரு பெண் சம்பந்தப்பட்ட பிரச்சனையைப் போல, உங்களுக்கு ஏதோ ஒரு உள்ளுறுப்புப் பிரச்சனை இருக்கிறது, மேலும் உங்கள் குடல் பாதையில் கோலிடிஸ் (colitis) நோயும் இருக்கிறது. அது சரிதானே? அது சரி என்றால், உங்கள் கையை உயர்த்துங்கள். 143 ஓ, சகோதரி, ஒரு மனிதனாகிய நான் எப்படி [இதைச் சொல்ல முடியும்]? அது இப்போது என்னை விட்டு நீங்கிவிட்டது. ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். சில நிமிடங்களுக்கு முன்பு உணர்ந்தது போலக் கூட நீங்கள் இப்போது உணரவில்லை. அது சரிதானே? அது சரி என்றால் உங்கள் கையை உயர்த்துங்கள். பாருங்கள், அது என்னவென்றால், கர்த்தருடைய தூதன் இங்கே இருந்தார், பேசிக் கொண்டிருந்தார், அவர் உங்களை நோக்கி அசைவாடினார். இப்போது, அதை நம்புவதற்கு உங்கள் விசுவாசத்தை நான் பெற முடிந்தால், அது சரியாகிவிடும். பார்க்கிறீர்களா? மேலும் அந்தத் தரிசனம் மறைந்த உடனே, ஒரு உணர்வு மாறியது, நீங்கள் மிகவும் லேசாக உணர்ந்தீர்கள், அது போய்விட்டது. அது சரிதானே? அப்போதுதான் நீங்கள் சுகமாக்கப்பட்டீர்கள். பார்க்கிறீர்களா? உங்கள் விசுவாசம் உங்களை இரட்சித்தது. அதை நீங்கள் நம்பினீர்கள், இல்லையா? நான் பேசிக்கொண்டிருந்தபோது, இப்போது எனக்குத் தெரியாது; ஒருவேளை நான் பேசிக்கொண்டிருந்தபோது, ஏனென்றால் நான்... நீங்கள் என் குரலைக் கேட்டீர்கள். ஆனால் அது நான் அல்ல. அது உங்களுக்கு உண்டான அந்த உணர்வு. அதுதான் அது. பார்க்கிறீர்களா? அது ஊடுருவிச் சென்றது, இப்போது, நீங்கள் வீட்டுக்குப் போங்கள், கோலிடிஸ் உங்களை விட்டு நீங்கப்போகிறது, உங்கள் மற்ற பிரச்சனைகளும் [நீங்கும்]. நீங்கள் வீட்டுக்குப் போங்கள், நலமாயிருங்கள். உங்கள் சகோதரிக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள், கர்த்தராகிய இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக, என் அன்புச் சகோதரி. ஆமென். (சரி.) 144 எல்லோரும் நம்புகிறீர்களா? இப்போது, இந்தக் கூடாரத்திலிருந்து, அல்லது இந்தச் சபையிலிருந்து, இன்று இரவு, எல்லோரும் இப்போதே சுகமாவதிலிருந்து எது தடை செய்யும்? நீங்கள் இப்போதே சுகமாக வேண்டுமல்லவா? சரி. நிச்சயமாக நீங்கள் இப்போதே சுகமாக வேண்டும். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 145 நீங்கள் நம்ப முயற்சிக்கிறீர்கள். அப்படித்தானே, அம்மா? உங்கள் கைகளை இதுபோல வைத்துக்கொண்டு, உங்கள் கைக்குட்டையுடன். உங்களிடம் ஜெப அட்டை இருக்கிறதா? உங்களிடம் ஜெப அட்டை இல்லையா? ஓ, உங்களிடம் இருக்கிறது. சரி. சரி. 146 இப்போது, நாம் அறிமுகமில் லாதவர்களா, அம்மா? [சகோதரி சகோதரர் பிரன்ஹாமிடம் பேசுகிறார்] அது நடந்து எவ்வளவு காலம் ஆகிறது? பதினெட்டு, ஓ, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் புற்று நோயிலிருந்து சுகமாக்கப்பட்டீர்கள். யாரோ... யாரோ உங்களுக்காக ஜெபித்தார்கள், நீங்கள் சுகமாக்கப்பட்டீர்கள். [சகோதரி மீண்டும் பேசுகிறார்.] ஆம். ஓ, அப்படியா. அப்படியானால் நீங்கள்-நீங்கள்... நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன், நீங்கள் எனக்குப் பதிலளியுங்கள். நான் ஒன்றைப் பார்க்கிறேன். அதன்பிறகு நிறைய நடந்திருக் கிறது, இல்லையா? நான் எதைப் பற்றிப் பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் தேவனை விட்டு பின்மாற்றமடைந்தீர்கள். மேலும் உங்களுக்கு மீண்டும் அதே காரியம் வந்திருக்கிறது. உங்களுக்கு மீண்டும் புற்றுநோய் வந்திருக்கிறது. அது சரிதானே? இப்போது நீங்கள் அறுவை சிகிச்சைக்குத் தயாராக இருக்கிறீர்கள். அது உண்மையா? சரி, அது உண்மை என்றால், உங்கள் கையை உயர்த்துங்கள். 147 பாருங்கள், அம்மா, மரணம் உங்கள் வாசலைத் தட்டுகிறது. நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் நம்புகிறீர்களா? [சகோதரி, "ஆம், ஐயா" என்று சொல்கிறார்] நீங்கள் தேவனிடம் திரும்புங்கள், தேவன் உங்களிடம் திரும்புவார். ["இப்போது, நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும்."] ஆம். ["நோயுற்றவர்களுக்காக ஜெபிப்பதற்கும் அவர்களுடன் கிரியை செய்வதற்கும் அவர் எனக்குக் கட்டளையிட்டார், ஆனால் நான் ஒருபோதும்...?... அதுதான் நான் ஏன்...?... என்ற ஒரு காரணம். 'பின்மாற்றம்' என்று சொல்லுமளவிற்கு நான் உண்மையில் பின்மாற்றமடையவில்லை, ஏனென்றால் நான் தேவனை விசுவாசிக்கிறேன், எனக்குத் தெரியும்...?..."] பாருங்கள், ஆனால் பாருங்கள் அது... பாருங்கள், அம்மா. நான்... நான் இதைத்தான் அர்த்தப்படுத்துகிறேன், பாருங்கள், உங்களுக்குப் புரியவில்லை... பின்மாற்றம் என்பது நீங்கள் முற்றிலுமாக விலகிச் சென்றுவிட்டீர்கள் என்பதையும்... செய்வதில்லை என்பதையும் அர்த்தப் படுத்துவதில்லை. ஒரு மனிதன் என்றால்... நான் ஒருவகையில் கால்வினிஸ்ட் (Calvinist). பார்க்கிறீர்களா? அந்தத் தீவிரவாத வகை அல்ல, ஆனால் ஒரு மனிதன் மறுபடியும் பிறக்கும்போது, நான் கால்வினிசக் கொள்கையுடையவன்; ஆனால் நீங்கள் தேவனிடமிருந்து உங்களுக்கு வந்த அழைப்பை விட்டு பின்வாங்கிவிட்டீர்கள். அது சரிதானே? உங்களால் செய்ய முடியாது என்று நீங்கள் உணர்ந்த ஒன்றை நீங்கள் போய்ச் செய்திருக்க வேண்டும். மனிதனின் ஆரோக்கியத்தை உண்டாக்கியவர் யார்? [சகோதரி, "தேவன்" என்று சொல்கிறார்] அது சரி. இப்போது, நீங்கள் நம்புகிறீர்களா? சரி. இங்கே வாருங்கள். அவர் உங்களை வாழவிட்டு, சாகவிடாமல் இருந்தால், உங்கள் வாழ்நாள் எல்லாம் நீங்கள் அவருக்குச் சேவை செய்வீர்கள் என்றும், அவர் உங்களிடம் செய்யச் சொன்னதைச் செய்வீர்கள் என்றும் இப்போது தேவனிடம் சொல்கிறீர்களா? செய்வீர்களா? கிறிஸ்தவர்களே, நாம் தலைகளைத் தாழ்த்துவோம். 148 பரலோகப் பிதாவே, இங்கே நின்று கொண்டு, அந்தப் பெண் சர்வவல்லமையுள்ள தேவனின் பிரசன்னத்தை அறிந்து உணர்ந்தி ருக்கிறாள் என்று அறிந்து ஜெபிக்கிறேன். அன்புள்ள இயேசுவே, நீர் அவளுக்கு உதவும்படி நான் ஜெபிக்கிறேன். இன்று இரவு, அவளை மன்னியும், ஆண்டவரே. 149 பவுல், "நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்காவிட்டால் எனக்கு ஐயோ" என்று சொன்னதை அறிவோம். ஆண்டவரே, இதோ இவள் உம்முடைய வாக்குத் தத்தங்களிலிருந்து பின்வாங்கி, திரும்பிச் சென்றாள். இப்போது, பிதாவே, நீர் எல்லாவற்றையும் மன்னித்து, இன்று இரவு அவளுடைய வார்த்தையின்படியே அவளை ஏற்றுக்கொள்ளும்படி நான் ஜெபிக்கிறேன். இவள் கைகளை உயர்த்தி, கண்ணீர் கன்னங்களில் வழிய உம்மிடம் வருகிறாள், ஆண்டவரே, நீர் அவளை நினைவுகூரும்படி கேட்கிறாள், ஏனென்றால் இதுபோல இவளால் இன்னும் அதிக காலம் வாழ முடியாது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். 150 பிதாவே, அவளுடைய அறிக்கையின் படியும், அவளுடைய இருதயத்தின் விருப்பத்தின் படியும், அவளுக்கு இந்த வாழ்வின் வாய்ப்பைக் கொடுக்கும்படி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்தப் புற்றுநோய் பிசாசு அவளை விட்டு விலகும்படி நான் கேட்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மா. மகிழ்ச்சியுடன் செல்லுங்கள். உங்களுக்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரிவியுங்கள். "தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று நாம் சொல்வோம். சரி, பில்லி, அனுப்பு. இல்லை. இப்போது, எல்லோரும் பயபக்தியுடன் இருங்கள். அது... அந்த மனிதருக்கு, அவருக்கு ஒரு செவிட்டு ஆவி பிடித்திருக்கிறது. 151 சர்வவல்லமையுள்ள தேவனே, ஜீவாதிபதியே, எல்லா நன்மையான ஈவுகளையும் தருகிறவரே, இந்த மனிதன் மேல் உம்முடைய ஆசீர்வாதங்களை அனுப்பும். இந்தச் செவிட்டு ஆவி மேலே வருகிறது, அவனது குளிர்ந்த, நடுங்கும் தன்மை எனக்கு மிக அருகில் வருவதை உணர்கிறேன், அவன் இந்த மனிதனை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிந்திருக்கிறான். இவன் உம்முடைய பிரசன்னத்தில் நிற்கிறான். ஆண்டவரே, நாங்கள் விசுவாசிகள். நீர் சொன்னது உண்மை என்று நாங்கள் நம்புகிறோம். "செவிட்டு ஆவி அந்த மனிதனை விட்டு வெளியேறியபோது, அவனால் கேட்க முடிந்தது" என்று நீர் சொன்னீர். ஆண்டவரே, நாங்கள் அதை நம்புகிறோம். 152 மேலும், "நீங்கள் புறப்பட்டுப்போய் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், நோயுற்றவர்கள் மேல் கைகளை வைக்கவும் நான் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்று நீர் சொன்னீர். நாங்கள் அதை நம்புகிறோம். மேலும், "நீங்கள் எவைகளை விரும்புகிறீர்களோ, நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அவைகளைப் பெற்றுக் கொண்டோம் என்று நம்புங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்" என்று நீர் சொன்னீர். ஆகவே, ஆண்டவரே, ஒரு தூதரின் கட்டளையின்படி, இந்த மனிதனுக்காக நான் இரக்கத்தைக் கேட்கிறேன். நீ, செவிட்டு ஆவியே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த மனிதனை விட்டுப் போ என்று நான் சொல்கிறேன். இவனை விட்டு வெளியே வா. ஐயா, நான் பேசுவது கேட்கிறதா? இப்போது நான் பேசுவது கேட்கிறதா? 153 நீங்கள் எவ்வளவு காலமாக இப்படி இருக்கிறீர்கள்? சரி. உங்கள் தலையை உயர்த்துங்கள். இவர் சுமார் பதினைந்து ஆண்டுகளாக இப்படி இருந்திருக்கிறார். கவனியுங்கள். நான் பேசுவது உங்களுக்குக் கேட்கிறதா, ஐயா? "ஆமென்" என்று சொல்லுங்கள். [சகோதரர், "ஆமென்" என்று சொல்கிறார்] நான் கர்த்தரை நேசிக்கிறேன். ["நான் கர்த்தரை நேசிக்கிறேன்."] கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ["தேவனுக்கு ஸ்தோத்திரம்."] தேவனுக்கு மகிமை. ["தேவனுக்கு மகிமை."] நான் இயேசுவை நேசிக்கிறேன். ["நான் இயேசுவை நேசிக்கிறேன்."] நீங்கள் ஒருவித பதட்டத்துடனும் இருந்திருக்கிறீர்கள். இல்லையா? அது ஒரு புராஸ்டேட் (prostate) பிரச்சனை. அது அதே நேரத்தில் உங்களை விட்டு நீங்கியது; ஒருவிதமாக எழுவது, உங்களுக்குத் தெரியும், அது போன்ற காரியங்கள். பாருங்கள். நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். பார்க்கிறீர்களா? கழிப்பறைக்குச் செல்லும் நேரம். அது உங்களை விட்டுப் போய்விட்டது, சகோதரரே. நீங்கள் இப்போது சுகமாகிவிட்டீர்கள். உங்கள் வழியில் சென்று களிகூருங்கள். "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று நாம் சொல்வோம். சரி, பில்லி, அல்லது... 154 ஓ, அவர் அற்புதமானவர் அல்லவா? ஓ, நீங்கள் எப்படி நம்பாமல் இருக்க முடியும்? நீங்கள் ஏன் இன்னும் சந்தேகிக்கிறீர்கள்? நம்முடைய ஆண்டவர் இப்போது செய்வதை விட அதிகமாக அவரால் என்ன செய்ய முடியும்? அவர் அற்புதமானவர். நீங்கள் நம்புகிறீர்களா? ஏதோ ஒன்று நடந்திருக்கிறது, இல்லையா, சகோதரரே? இப்போது நான் பேசுவது நன்றாகக் கேட்கிறதா? அப்படியானால், அவர்கள் பார்க்கும்படி உங்கள் கையை அதுபோல அசைத்துக் காட்டுங்கள். சரி. நீங்கள் சுகமாக்கப் பட்டீர்கள். 155 உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் அந்த மனிதரும் எதிலிருந்தோ விடுபட விரும்புகிறார். அப்படித்தானே, ஐயா? நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் நம்புகிறீர்களா? உங்களிடம் ஜெப அட்டை இருக்கிறதா? உங்களிடம் ஜெப அட்டை இருக்கிறது. சரி, நீங்கள் அங்கே அமர்ந்திருக்கும் போதே, நீங்கள் அதைப் பயன்படுத்தத் தேவையில்லை என்று நான் விரும்புகிறேன். உங்களுக்கு இரட்டை குடலிறக்கம் (double hernia) இருக்கிறது. இல்லையா? ஒரு குடலிறக்கம், ஹெர்னியாவா? அது சரிதானே? அது சரி என்றால், உங்கள் கையை உயர்த்துங்கள். 156 சொல்லுங்கள், உங்களுக்கு மறு பக்கத்தில், அந்தப் பக்கத்தில், உங்களுக்கு மறுபக்கத்தில் அமர்ந்திருக்கும் மனிதருக்கும் குடலிறக்கம் இருக்கிறது. அது சரிதானே, ஐயா? சரி. அது சரி என்றால் உங்கள் கையை உயர்த்துங்கள். இப்போது, நீங்கள் முடியும்-நீங்கள் முடியும், நீங்கள் விரும்பினால் போய் நலமாயிருங்கள். 157 நேற்று இரவு இங்கே நின்ற ஒரு மனிதர் வரிசையில் அழைக்கப்பட்டார், இன்று தெருவில் இருந்தார், அவருக்கு ஒரு மிகப் பெரிய குடலிறக்கம் இருந்தது; அது முழுவதும் மறைந்துவிட்டது. அது அவரை விட்டுப் போய் விட்டது. இப்போது செல்லுங்கள். தேவனிடத்தில் விசுவாசம் வையுங்கள். பார்க்கிறீர்களா? 158 சிறிய அம்மையே, சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உங்கள் மேல் இருந்தார்; உங்கள் நோய் என்னவென்று எனக்குத் தெரியும். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், தேவன் உங்களைச் சுகமாக்குவார். நீங்கள் நம்புகிறீர்களா? உங்களுக்கு மூட்டுவலி (arthritis) இருந்தது, இல்லையா? அது சரிதானே? உங்கள் கையை அதுபோல அசைத்துக் காட்டுங்கள். சரி. அவர் உங்களைச் சுகமாக்கிவிட்டார், ஆகவே நீங்கள் இப்போது ஜெப வரிசையில் வரத் தேவையில்லை, அப்படியே வீட்டுக்குப் போங்கள். பார்க்கிறீர்களா? உங்கள் மூட்டுவலி நீங்கிவிட்டது. தேவனிடத்தில் விசுவாசம் வையுங்கள். அவர் அற்புதமானவர். 159 சரி. நீங்கள்தான் நோயாளியா? அதாவது அந்தப் பெண்மணி...ஆம். சரி. நீங்கள்... நான் உங்களிடம் பேசும்போது, நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். நீங்கள் ஜெப அட்டையை வைத்துக்கொண்டு இங்கே வரிசையில் வந்திருக்கும் ஏதோ ஒரு பெண்மணி. இந்த வழக்கில் ஏதோ விசித்திரமான ஒன்று இருக்கிறது. நான் இப்போது பார்க்கிறேன். பார்க்கிறீர்களா? ஏதோ... உங்கள் தேசம் என்ன? உக்ரைனியன். ம்ம்-ஹூம். ம்ம்-ஹூம். இது உங்களுக்குச் சற்று விசித்திரமாக இருக்கிறது, இல்லையா? ம்ம்-ஹூம். பார்க்கிறீர்களா? [சகோதரி, "நான் திறந்த இருதயத்துடன் வந்திருக்கிறேன்" என்று சொல்கிறார்] நான் அதை நம்புகிறேன். நீங்கள் உண்மையில் இயேசு கிறிஸ்துவைத் தேடுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். 160 எனக்குத் தெரியும், அம்மா. இப்போது பாருங்கள், நீங்கள் கலங்கியிருக்கிறீர்கள், உங்கள் தோள்களில், உங்கள் விலாவில், உங்கள் முதுகில் உங்களுக்குப் பிரச்சனை இருக்கிறது. அது சரிதானே? மேலும் உங்கள் இருதயத்தில் உங்களுக்கு ஒரு பாரம் இருக்கிறது, ஏனென்றால் உங்களுக்கு ஒரு இளம் மகள் இருக்கிறாள், அந்த இளம் மகளுக்குப் பக்கவாதம் (paralysis) அல்லது ஏதோ வாதம் இருக்கிறது. அது சரிதானே? அது அனைத்தும் உண்மை என்றால், எல்லாம் சரியாக இருப்பதால், உங்கள் கையை உயர்த்துங்கள். இப்போது, இயேசு கிறிஸ்துவை, உங்கள் இரட்சகராகவும், உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் சுகமளிப்பவராகவும் ஏற்றுக் கொள்வீர்களா? செய்வீர்களா? உங்கள் வைராக்கியம் (orthodox) போய்விட்டது; நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒரு கிறிஸ்தவராகிறீர்கள்; செல்லுங்கள், நீங்கள் விசுவாசித்தபடியே உங்களுக்கு ஆகக்கடவது. ஆமென். 161 நாம், "தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக" என்று சொல்வோம். அந்தப் பெண்மணி, உண்மையாகவே, பரிசுத்த ஆவியானவர் தம்மைத் தொட்டபோது, கண்ணீர் தன் கன்னங்களில் வழிய, என்ன நடந்தது என்பதை அறிந்துகொண்டார். அது சரிதான். தேவன் அந்த வேலையை அப்பொழுதே செய்துவிட்டார். சரி. 162 வாருங்கள், அம்மா. பயப்பட வேண்டாம், விசுவாசம் வையுங்கள். சகோதரி, தேவன் உங்களுக்காக ஏதோ ஒன்றை, ஒரு அற்புதத்தைச் செய்யப்போகிறார். விசுவாசம் வையுங்கள். என்னை அவருடைய தீர்க்கதரிசியாக நம்புங்கள். எபிரேயத் தீர்க்கதரிசிகள் மேல் இருந்த அதே ஆவியானவர் இப்போதும் இங்கே இருக்கிறார். பார்க்கிறீர்களா?. தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை எடுத்துக்கொள்கிறார், ஆனால் ஒருபோதும் தம்முடைய ஆவியை அல்ல. அது தொடர்ந்து செல்கிறது. ஒருவர் மரிக்கும்போது, அந்த ஆவியானவர் மற்றவர் மேல் வருகிறார், அவர் தொடர்ந்து செல்கிறார். ஒவ்வொரு தலைமுறையிலும், அவர் யாரோ ஒருவரை வைத்திருக்கிறார். இப்போது விசுவாசம் வையுங்கள். 163 நீங்கள்தான் நோயாளியா, அம்மா? ஆம். சரி. நீங்கள் நம்புகிறீர்களா?. தேவன் உங்கள் பிரச்சனைகளை எனக்கு வெளிப்படுத்துவார் என்று நம்புகிறீர்களா? வரத்தின் மூலமாக என்னால் அதை மட்டுமே செய்ய முடியும். அது சரிதானே? ம்ம்-ஹூம். இப்போது பாருங்கள். நீங்கள் ஒரு விசுவாசி, ஆவியினால் நிரப்பப்பட்டவர். மேலும் இப்போது, பாருங்கள். நீங்கள் அப்படித்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு நரம்புத் தளர்ச்சி நிலை இருக்கிறது, உங்களுக்கு நேரிட்ட காலத்தின் காரணமாக ஒரு மன உளைச்சல் இருக்கிறது. மேலும், மற்றொரு காரியம் என்னவென்றால், உங்களுக்கு வயிற்றுக் கோளாறு இருக்கிறது. அது சரிதானே? அது சரி. உங்கள் நரம்புத் தளர்ச்சி வயிற்றுக் கோளாறை ஏற்படுத்தி யிருக்கிறது, அது வயிற்றில் ஒரு புண்ணாக (ulcer) இருக்கிறது; அது புளிப்புத் தன்மையையும், மற்றும் பலவற்றையும், வீக்கத்தையும், சில சமயங்களில் இருதயப் படபடப்பையும் ஏற்படுத்துகிறது. மேலும் உங்கள் மன நிலைகள், நீங்கள் எல்லா நேரத்திலும் உளைச்சலாகவும், குழப்பமாகவும், மனச்சோர் வுடனும் உணர்கிறீர்கள். அது சரிதானே? மேலும் பலமுறை சாத்தான் உங்களிடம், நீங்கள் எல்லையைக் கடந்துவிட்டீர்கள் என்றும், மற்றும் அவைகள் எல்லாவற்றையும் சொல்லியி ருக்கிறான்... அது சரிதானே? ஆனால் அவன் பொய் சொல்லியிருக்கிறான்; அவன் பொய் சொல்லியிருக்கிறான். இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்கியிருக்கிறார். அதை நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீங்கள் விரும்புவதைப் போய்ச் சாப்பிடுங்கள். உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி. 164 வாருங்கள், ஐயா. நீங்கள் நம்புகிறீர்களா? ஐயா, உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகிறீர்களா? இப்போது நீங்கள் உணருகிற அந்தப் பரிசுத்த ஆவியானவர் அருகில் வந்து, கிணற்றடியில் இருந்த பெண்ணிடம் அவர் செய்தது போல, அவளுடைய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்று அவளிடம் சொன்னது போல, உங்களிடம் சொன்னால், நீங்கள் அவரை நம்புவீர்களா? அவரை ஏற்றுக்கொள்வீர்களா? உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது, அது உங்கள் தொண்டையில் அல்லது உங்கள் நெஞ்சில் இருக்கிறது, இரண்டில் ஒன்று. நீங்கள் நின்று கொண்டிருப்பதையும், இருமுவதையும் நான் பார்க்கிறேன். அது-அது-அது ஆஸ்துமா (இரைப்பு நோய்). அது சரிதானே? அது சரிதானே? சரி. 'இயேசுவே உமக்கு நன்றி, நான் அதிலிருந்து விடுபட்டுவிட்டேன்' என்று சொல்லிக்கொண்டே மேடையிலிருந்து இறங்கிப் போங்கள். பார்க்கிறீர்களா? தேவனுக்குத் துதி செலுத்திக்கொண்டே மேடையிலிருந்து இறங்கிப் போங்கள், அது உங்களை விட்டு நீங்கிவிடும், இனி ஒருபோதும் உங்களைத் தொந்தரவு செய்யாது. வாருங்கள், வாலிபனே. ஓ, மக்கள் நம்புவதற்கு அவர் எப்படி கிரியை செய்கிறார். 165 வாலிபனே, இங்கே பார். நோயுற்ற நிலையில் இங்கே நிற்பதற்கு நீ மிக இளம் பையனாக இருக்கிறாய். இயேசு கிறிஸ்துவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? நீ அவரை நேசிக்கிறாய். அவர் தேவனுடைய குமாரனா? அவர் உன்னைக் குணமாக்குகிறவரா? அவர் [அப்படியே] இருக்கிறார். அந்த வயிற்றுக் கோளாறிலிருந்து இப்போதே உன்னை விடுபடச் செய்ய அவரால் முடியும். அது சரிதானே? சரி, அப்படியானால் நீ விரும்புவதைப் போய்ச் சாப்பிடு. உன் விசுவாசம் உன்னை இரட்சிக்கிறது. ஆம், ஐயா. சரி. 166 வா, சிறு பையனே. நீயும் ஒரு இளம் பையன்தான். நீ நம்புகிறாயா? நீ ஞாயிறு பள்ளிக்குச் செல்கிறாயா? நீ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறாயா? உன் வாழ்நாள் எல்லாம் அவருக்கு ஊழியம் செய்ய நீ விரும்புவாயா? நீ குணமடைய அவர் அனுமதித்தால், நீ அதைச் செய்வாயா? அவருடைய மகிமைக்காக மட்டுமே நீ அதைச் செய்வாயா? [ஒலி நாடாவில் காலி இடம்] 167 சரி. பாருங்கள், சகோதரி. ஒரு கணம் அருகில் வாருங்கள். நீங்கள் நம்புகிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகிறீர்களா? சரி, சற்று நேரத்திற்கு முன்பு, நான் இங்கே ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே பின்னால் வரிசையில் நிற்கும் அந்த இரண்டாவது பெண்மணி இப்போது நிற்பது போல, நீங்களும் பின்னால் வரிசையில் நின்று கொண்டிருந்தீர்கள், அதே காரியம். ஒரு நரம்புத் தளர்ச்சி நிலைமை குறித்து அந்தப் பெண்மணிக்கு எப்படிப்பட்ட உணர்வு இருந்தது என்பதைப் பற்றி நான் சொன்னபோது நீங்கள் மிகவும் பதற்றமடைந்தீர்கள். அது சரிதானே? ஏனென்றால் உங்களுக்கும் சரியாக அதே காரியம்தான் இருக்கிறது. உங்களுக்கு, அது சரிதானே? இப்போது, அவர் உங்களைக் குணமாக்கப் போகிறார் என்று நீங்கள்-நீங்கள் நம்புகிறீர்களா? 168 ஆனால் நான் உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்றுதான் நீங்கள் விரும்புகிறீர்கள். அதைத்தான் நீங்கள் அப்போது நினைத்துக் கொண்டிருந்தீர்கள். உங்கள் மனதை வாசிப் பதல்ல, ஆனால் அதைத்தான் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தீர்கள். 'அவர் எனக்காக ஜெபிக்கப் போகிறாரா?' என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். அது உங்கள் மனதில் மிக வேகமாக வந்தது. அது சரிதானே? ம்ம்-ஹூம். பார்க்கிறீர்களா? அது சரி. பாருங்கள், அந்த எண்ணங்களை உங்களால் மறைக்க முடியாது. பார்க்கிறீர்களா? இது அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறது. இப்போது, இங்கே வாருங்கள், ஏனென்றால் நீங்கள் குணமடைவதற்கு உங்களுக்கு அதுதான் தேவை. மேலும் நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள், என் முழு இருதயத்தோடும் நான் நம்புகிறேன். 169 அன்புள்ள பரலோகப் பிதாவே, இந்தப் பெண்மணிக்கு நான் ஜெபிக்க வேண்டும் என்கிற அந்தத் தொடுப்புப் புள்ளி இருப்பதைப் பார்த்து, அது அவளுடைய மனதில் கடந்து செல்வதை நான் பார்த்ததாலும், அவள் அதற்கு மாறாகத் தலையை அசைத்ததைப் பார்த்ததாலும், அது அவளுடைய மனதிலிருந்து நேரடியாகப் பேசப்படுகிறது. தேவனே, நீர் அவளைச் சுகமாக்கும்படி நான் ஜெபிக்கிறேன். மேலும் இப்போது, இந்தப் பிசாசு, இவளுடைய மனதை இழக்கச் செய்ய முயற்சிக்கும் இந்தக் காரியம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்தப் பெண்ணை விட்டு வெளியேறு என்று நான் உனக்குச் சொல்கிறேன். 170 இப்போது, பாருங்கள், சகோதரி. வீட்டுக்குப் போங்கள். நீங்கள் குணமாகப் போகிறீர்கள். என்னை நம்புகிறீர்களா? நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதையும், என்னவாக இருக்கிறீர்கள் என்பதையும் தேவன் அறிந்திருந்தால், நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்பதையும் அவர் அறிவார் அல்லவா? அப்படியானால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். இப்போது வீட்டுக்குப் போங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 171 சரி. வாருங்கள், அம்மா. எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் நம்புகிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகிறீர்களா? அவர் உங்களைக் குணமாக்குவார் என்று நம்புகிறீர்களா? உங்களுக்கு முதலாவது எதிரி இருக்கிறது: இருதயக் கோளாறு. அது சரிதானே? உண்மை. சரி. நீங்கள் நம்புகிறீர்களா...?... 4